உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

199

உச்சத்தரம் : திருக்குறள் அறநூல்களுள் தலைசிறந்தது. ஒப்புத்தரம் : வெள்ளி பொன்னைப்போல் உயர்ந்ததன்று. உறழ்தரம் : வெள்ளியைவிடப் பொன் உயர்ந்தது. ஒப்புத்தரம் : கோவேறுகழுதை குதிரையைப் போல அழகானதன்று.

உறழ்தரம் : கோவேறு

அழகானது.

கழுதையைவிடக்

குதிரை

ஒப்புத்தரம் : தேக்கு தோதகத்தியைப்போல் கடினமான

தன்று.

உறழ்தரம் : தேக்கைவிடத் தோதகத்தி கடினமானது. ஒப்புத்தரம் : வயிரத்தைப்போல் சிறந்த மணி வேறொன் றுமில்லை.

உறழ்தரம் : வயிரம் மற்றெல்லா மணிகளினும் சிறந்தது. உச்சத்தரம் : வயிரம் மணிகளுட் சிறந்தது.

பயிற்சி

கீழ்வரும் வாக்கியங்களின் பொருளை மாற்றாமல் ஒப்பீட்டுத் தரத்தை மாற்றுக :

(1)

சாத்தனைப்போலக் கொற்றன் படிப்பவனல்லன்.

(2) தமிழ்நாட்டில் மாபெருநகரம் சென்னை.

(3)

மலபார்த் தேக்கைவிட இரங்கூன் தேக்கு உறுதியானது.

(4) அன்பு அறமனைத்தையும் தழுவியது.

(5)

ஊமை வாயனுக்கு உளறுவாயன் மேல்.

(6) யாழோசை மிக இனிமையானது.

(7) மாட்டைப்போல மாந்தனுக்குப் பயன்படுவது வேறு எந்த விலங்கு?

(8)

இன்றைக்கு நாளைக்கு என்று இழுத்துக் கடத்துவதினும், ல்லை யென்பது நல்லது.

செய்வினை செயப்பாட்டுவினைப் பரிமாற்றம்

கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க :

செய்வினை

கரிகாலன் காவிரிக்குக் கரை கட்டி

செயப்பாட்டு வினை :

னான்.

கரிகாலனாற் காவிரிக்குக் கரை கட்டப் பட்டது.