உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

207

(2) ஆகா! நான்மட்டும் அரசனா யிருந்திருந்தால்!

(3)

(4)

(5)

நான் அரசனாயிருந்திருந்தால் மிக நன்றாயிருந்திருக்கும். என்னே உலக வாழ்க்கை!

உலக வாழ்க்கை நிலையற்றதும் துன்பம் நிறைந்தது மானது. ஓ! என் இளமை திரும்பிவரட்டுமே!

என் இளமை திரும்பி வரவேண்டுமென்பது என் வேணவா. என்னத்தைச் சொல்ல!

நான் சொல்லமுடியாதபடி (எது சொல்லியும் பயனிலாத வாறு) கேடு விளைந்துள்ளது.

(6) ஆ! என் அருமை நண்பனை மீளவும் காணப் பெறேனா! என் அருமை நண்பனை மீளவும் காணப்பெற்றால் மிக இன்பமாயிருக்கும்.

(7) தமிழ் வாழ்க!

தமிழ் அழியாதிருக்கவேண்டும்.

(8) அந்தோ! என் செய்வேன்!

நான் என்ன செய்தும் தப்பமுடியாத துன்பத்தில் அகப்பட்டு வருந்துகின்றேன்.

பயிற்சி 1

கீழ்வரும் உணர்ச்சி வாக்கியங்களைச் சாற்று வாக்கியங் களாக

மாற்றுக:

(1) என்ன கொடுமை இளங் குழவிகளையும் குண்டு போட்டுக் கொல்வது!

(2) ஐயோ! பாவம்! இவ் அகதிக் குருடன் நிலை.

(3) நான்

நினைத்தவிடமெல்லாம்

செல்லும் சித்தி

பெற்றிருந்தால் எவ்வளவு வசதியாயிருக்கும்!

(4) என்னிடம் பணமிருந்தால் உனக்கென்னதான் வாங்கித் தரமாட்டேன்!

(5) பசியாதிருக்க வழியில்லையா!

(6) இவ்விடத்தில் ஒரு புதையல் இருக்கட்டுமே!

(7) நான் ஒரு நிமையம் (நிமிஷம்) பிந்தியிருந்தால், என் கதி என்னவாயிருக்கும்!

(8) என்னே இனிமை இன்று யான் வாங்கிய மாங்கனி!

(9) என்றைக்குத் தீருமோ என் வறுமை!