உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




206

(1)

(2)

(3)

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

மாந்தனுக்காகச் சட்டம் ஏற்பட்டதா? சட்டத்திற்காக மாந்தன் ஏற்பட்டானா?

உயிர் பெரிதா? பணம் பெரிதா?

வணிகரும் வழக்கறிஞரும் பொய்சொல்லாம லிருக்க முடியுமா?

(4) இவ்வுலக வாழ்க்கை யாருக்குத்தான் காயம்?

(5) எத்தனை காரியங்களை ஒருவன் கவனிக்கமுடியும்?

(6) ஆசிரியன் தவறி நடக்கலாமா? அகராதியிற் பிழையிருக்க

லாமா?

(7) இத்தனை செய்திகளையும் எப்படி நினைவில் வைத் திருக்கிறது?

(8) ஆயிரம் உருபா வந்தாலென்ன, ஆயிரம் உருபா போனா

லென்ன?

பயிற்சி 2

கீழ்வரும் சாற்று வாக்கியங்களை வினாவாக்கியங்களாக

மாற்றுக:

(1)

தென்னைமரத்தைக் கோணலாக்கியவரும் தேக்குமரத்தை நேராக்கியவரும் இல்லை.

(2) பசியால் வருந்துகிறவனுக்குப் பணமலை யிருந்தும் பயனில்லை. (3) கற்புடை மனைவியே பொற்புடைச் செல்வம்.

(4) களங்காய் இருண்டிருப்பதும் விளங்காய் திரண்டிருப் பதும் இயற்கை.

(5) கடன் வாங்கியும் பட்டினி; கலியாணம் செய்தும் துறவி.

(6)

கவலைப்படுவதினால் ஒருவனும் தன் உடம்புடன் ஒரு

முழத்தைக் கூட்டமுடியாது.

(7) மறதியிருப்பது மாணவனுக்கு நன்றன்று.

(8) சோவியத்து அரண்மனையைப்போல உயரமான கட்டடம் வேறொன்றுமில்லை.

(1)

உணர்ச்சிவாக்கியச் சாற்றுவாக்கியப் பரிமாற்றம் (Interchange of Exclamatory and Assertive Sentences)

கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க:

என்னே அழகு இம் மலைக்காட்சி!

இம் மலைக்காட்சி மிக அழகாயிருக்கின்றது.