உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

205

வினாவாக்கியச் சாற்றுவாக்கியப் பரிமாற்றம்

(Interchange of Interrogative and Assertive Sentences)

கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க :

(1)

நீ சொன்னபடியெல்லாம் செய்வதற்கு நான் உன் அடிமையா? நீ சொன்னபடியெல்லாம் செய்வதற்கு நான் உன் அடிமை யல்லேன்.

(2) நாம் வேலைபெறுதற்கு மட்டுமா கல்வி பயில்வது?

நாம் கல்வி பயில்வது வேலைபெறுதற்கு மட்டுமன்று.

(3) தீமை செய்கிறவனைத் தண்டிப்பதற்கு, அவனுக்கு நன்மை செய்வதைவிடச் சிறந்த வழி ஏது?

(4)

(5)

தீமை செய்கிறவனைத் தண்டிப்பதற்கு, அவனுக்கு நன்மை செய்வதே சிறந்த வழி.

எத்தனையோ அறிவியல் முழுமணி நூல்கள் உள்ள இக்காலத்தும், குட்டிக்கதைகளை ஏன் படிக்க வேண்டும்? எத்துணையோ அறிவியல் முழுமணி நூல்கள் உள்ள க்காலத்தும், குட்டிக்கதைகளைப் படிப்பது அறிவுடை மையாகாது.

சிவிங்கி தன் புள்ளியையும் எத்தியோப்பியன் தன் கருமை யையும் மாற்ற முடியுமா?

சிவிங்கி தன் புள்ளியையும் எத்தியோப்பியன் தன் கருமை யையும் மாற்ற முடியாது.

ச் சிறு

(6) இத்தனை ஆயிரம்பேர் உண்ணுமிடத்தில், இச் பிள்ளைக்கு உணவளிப்பதனாலா செலவு மிகுந்துவிடும்? இத்தனை ஆயிரம்பேர் உண்ணுமிடத்தில், இச் சிறு பிள்ளைக்கு உணவளிப்பதனால் செலவொன்றும் மிகுந்து விடாது.

(7) கோடிக்கணக்கான செல்வமுள்ளவனுக்கு ஒரு காசு போனால்தானென்ன?

கோடிக்கணக்கான செல்வமுள்ளவனுக்கு ஒரு காசு போனதினால் ஒன்றும் கெட்டுவிடாது.

பயிற்சி 1

கீழ்வரும் வினாவாக்கியங்களைச் சாற்று வாக்கியங்களாக மாற்றுக :