உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

213

(9) சோம்பேறி உழைக்கிறதில்லை; ஆனால், சுவையாய் உண்ண விரும்புகின்றான்.

(10) தொடக்கத்தில் பலர் முந்தினார்; ஆனால், இறுதியில் பிந்திவிட்டனர்.

(11) பெற்றோர் பிள்ளைகளைப் பெறுகின்றனர், வளர்க்கின் றனர், பயிற்றுவிக்கின்றனர், மணஞ் செய்விக்கின்றனர், பிழைக்கும் வழிப்படுத்துகின்றனர்.

(12) மழை பெய்தும் கெடுக்கும்; பெய்யாமலும் கெடுக்கும். (13) அவர் வாடகையையும் கொடுக்கவில்லை; வீட்டையும் விடவில்லை.

(14) க்காலப் போர்களில் போர் செய்வார்மட்டும் கொல்லப் படுகின்றாரல்லர்; போர் செய்யாதவரும் கொல்லப்படு கின்றனர்.

(15) ஆபிரகாம் பண்டிதர் கருணானந்த முனிவரைக் காண விரும்பினார்; அதற்குச் சுருளிமலை சென்றார்.

(16) நாம் உழைக்கவேண்டும்; இல்லாவிட்டால் உரம்பெற முடியாது.

(17) பாடுபடவேண்டும்; அதனால் பலனடையலாம்.

(18) நீ இனிமேல் இங்கு வரக்கூடாது; வந்தால் சிறை செய்யப் படுவாய்.

(19) நமச்சிவாய முதலியார் பலர்க்குத் தமிழ் பலர்க்குத் தமிழ் கற்பித்தது மட்டுமன்று, வேலையும் வாங்கிக்கொடுத்தார்.

(20) இந்தியர் பெரும்பாலும் கல்வியிற் பிற்போக்காளர்; அதனால் பல துறையில் முன்னேற முடியவில்லை.

(21) சிலர் கல்வியில் தாழ்ந்தவர்; ஆயினும், ஒழுக்கத்தில் உயர்ந்தவர்.

(22) கந்தன் வழியில் ஒரு பணப்பையைக் கண்டான்; அதை எடுத்தான்.

(23) அசோகன் தமிழரசரை வெல்ல முடியவில்லை; அதனால், அவருடன் நட்புப்பூண்டான்.

(24) ஒவ்வொரு காரியத்தையும் தீர எண்ணவேண்டும்; அதன் பின்பு செய்யவேண்டும்.