உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




212

தனிவாக்கியம்

கூட்டுவாக்கியம் :

தனிவாக்கியம்

கூட்டுவாக்கியம் :

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

எடிசன் ஒருமுறை மூன்று நாள்களாய் உறங்காமல் ஆராய்ச்சி நடத்தினார். பலர் ஆள விரும்பலாம்; ஆனால், அவரெல்லாரும் அரசராக முடியாது. ஆள விரும்புகிறவரெல்லாம் அரசராக முடியாது.

ஒருவன்

கோளரிவாய்க்குள்

தன்

தலையைக் கொடுக்கலாம்; ஆனால், அத் தலை மீளுவதரிது.

கோளரிவாய்த்தலை மீளுவதரிது.

தனிவாக்கியம்

கூட்டுவாக்கியம் :

புதன் கதிரவனைச் சுற்றிவரும்; அதற்கு 88 நாட் கொள்ளும்.

தனிவாக்கியம் :

புதன் 88 நாளில் கதிரவனைச் சுற்றி வரும். பயிற்சி

கீழ்வரும் கூட்டு வாக்கியங்களைத் தனிவாக்கியங்களாக மாற்றுக :

(1) எடிசன் இளமையில் செய்தித்தாள் விற்றார்; அவ்வகையில் பிழைத்தார்.

(2) இன்றைக்கு நீ பணங்கட்டவேண்டும்;

தேர்வெழுத முடியாது.

ல்லாவிட்டால்

(3) தாவீது சிறுவன்தான்; ஆயினும், கோலியாத் தரக்கனைக் கொன்றுவிட்டான்.

(4) இறுதிக் காலத்தில், தமிழ்நாட்டு மூவேந்தரும் ஒற்றுமை யில்லாதிருந்தனர்; அதனால், தம் நாட்டையிழந்தனர்.

(5) கட்டியங்காரன் சச்சந்தனைக் கொன்றான்; அதன்பின் அரசனானான்.

(6) அவ் விலங்கு புலியா யிருக்கமுடியாது; ஏனென்றால், அது புல் தின்கின்றது.

(7) மதிற்காவலர் விழிப்பாயிருந்தனர்; இருந்தும், கோட்டையை விட்டுவிட்டனர்.

(8) தேசியப்பாவலர் சுப்பிரமணிய பாரதியார் திருவல்லிக் கேணிப் பார்த்தசாரதி கோயில் யானையால் மிதியுண்டார்; அதனால் இறந்தார்.