உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

(5) நாளை நிகழ்ச்சி நமக்குத் தெரியாது.

(6) இன்று என் தந்தையார் கடிதத்தை எதிர்பார்க்கின்றேன்.

(7) தம் குற்றத்தை ஒப்புக்கொள்கின்றவர் மிகமிகச் சிலர்.

(8) உன் வாய்மையில் எனக்கு நம்பிக்கையில்லை.

215

(9) அவருடைய ஆங்கில அறிவு சிறந்ததாகக் கருதப்பட வில்லை.

(10) மக்கட்சமத்துவம் என் கொள்கை.

(11) உலக அமைதி நோபெல் நாட்டங்களுள் ஒன்று.

(12) உடன்கட்டை யேறுதல் பெண்டிங்குப் பிரபுவால் நிறுத்தப்பட்டது.

கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க :

தனிவாக்கியம் : செருமானியர் வேலையெல்லாம் மிகச் சிறந்ததாகும்.

கலப்புவாக்கியம்: செருமானியர் செய்யும் வேலை யெல்லாம் மிகச் சிறந்ததாகும்.

தனிவாக்கியம் : சிசரோ கடிதங்கள்

இலக்கியமாக உள்ளன.

இன்று சிறந்த

கலப்புவாக்கியம்: சிசரோ எழுதிய கடிதங்கள் இன்று சிறந்த இலக்கியமாக உள்ளன.

தனிவாக்கியம் : முதற்கால மாந்தர் மொழி ஒருசில ஒலிகளையே கொண்டது.

கலப்புவாக்கியம்: முதற்கால மாந்தர் பேசிய மொழி ஒருசில ஒலிகளையே கொண்டது.

தனிவாக்கியம் : மழைநாளில் மக்கள் நடமாட்டம்

குறையும்.

கலப்புவாக்கியம்: மழைபெய்கிற

நாளில்

மக்கள்

நடமாட்டம் குறையும்.

தனிவாக்கியம் : வெந்நீர்க்கிணறு சிவகாசியில் ஒன்றுண்டு.

கலப்புவாக்கியம்: வெந்நீருள்ள

கிணறு

ஒன்றுண்டு.

சிவகாசியில்