உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




216

பயிற்சி

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கீழ்வரும் தனிவாக்கியங்களைப் பெயரெச்சக் கிளவியக் கலப்பு வாக்கியமாக மாற்றுக:

(1) சேவற்போர் சிலர்க்கு ஒரு சிறந்த வேடிக்கை.

(2) சம்பள நாள் எல்லார்க்கும் மகிழ்ச்சியைத் தரும்.

(3) மாட்டுவண்டி வேகமாய்ச் செல்லாது.

ன்று

கிடைப்ப

(4) மறைமலையடிகளின் நூல்களிற் பல இன்

தில்லை.

(5) தண்ணீர்க் காய்களெல்லாம் தடுமத்தை (ஜலதோஷத்தை) யுண்டாக்கும்.

(6) பூவாது காய்க்கும் மரங்களைப் பேய்மரம் என்பர்.

(7) சோமசுந்தர நாயகர் சொற்பொழிவெல்லாம் சொற்சுவை பொருட்சுவை மிகுந்தவை.

(8) வெள்ளையர் உடை விலையுயர்ந்தது.

(9) கூலிக்காரன் உணவு மாறிவருகின்றது.

(10) இளவட்டக்கலைத் தென்னாட்டுச் சிற்றூர்களில் காணலாம்.

(11)

டையர் ஊரே முதலில் சேரி எனப்பட்டது.

(12) வண்டு மாங்கனி மிக இனிமையா யிருக்கும்.

கீழ்வரும் வாக்கிய

ணைகளை ஆய்க :

தனிவாக்கியம் : மாதவி கோபத்தினால்

கனகவிசயர்

தலைநொந்தது.

கலப்புவாக்கியம் : மாதவி கோபித்ததினால் கனகவிசயர்

தலைநொந்தது.

தனிவாக்கியம் : பெரும் போர்க்குப் பின்பு, பஞ்சம் அல்லது கொள்ளைநோய் உண் டாகும்.

கலப்புவாக்கியம் : பெரும்போர் நிகழ்ந்தபின்பு, பஞ்சம் அல்லது கொள்ளைநோய் உண்டாகும்.

தனிவாக்கியம் : ஆங்கிலேயர் ஆட்சியில் இந்தியாவில் சமத்துவ நீதி நிலைநிறுத்தப் பெற்றது.

கலப்புவாக்கியம் : ஆங்கிலேயர் ஆண்டபோது, இந்தியா வில் சமத்துவநீதி நிலை நிறுத்தப் பெற்றது.