உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




220

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க :

கலப்புவாக்கியம் : அவன் செய்த வேலை அவனுக்கே பிடிக்கவில்லை.

தனிவாக்கியம் : அவன் வேலை அவனுக்கே பிடிக்க

வில்லை.

கலப்புவாக்கியம் : மணம் நடக்கும் அறை பிணம் கிடக்கும் அறையாக மாறலாம்.

தனிவாக்கியம் : மணவறை பிணவறையாக மாறலாம்.

கலப்புவாக்கியம் : தங்கம் விளையும் வயல் புரத்தில் உள்ளது.

குவளால்

தனிவாக்கியம் : தங்கவயல் குவளாலபுரத்தில் உள்ளது. கலப்புவாக்கியம் : கம்பர் வாழ்ந்த காலம் பன்னிரண் டாம் நூற்றாண்டு.

தனிவாக்கியம் : கம்பர் காலம் பன்னிரண்டாம் நூற்

றாண்டு.

கலப்புவாக்கியம் : வண்டி செல்லும் பாதை ஏறத்தாழ

எல்லாவூர்க்கும் உண்டு.

தனிவாக்கியம் :

வண்டிப்பாதை

வூர்க்கும் உண்டு.

ஏறத்தாழ எல்லா

பயிற்சி

கீழ்வரும் பெயரெச்சக் கிளவியக் கலப்பு வாக்கியங்களைத் தனிவாக்கியமாக மாற்றுக :

(1) அவரவர் பெற்ற பிள்ளை அவரவர்க்குப் பெரிது.

(2) குழவி பேசும் மொழி குழலினும் யாழினும் இனிது.

(3) யான் பிறந்த வூர் தென்னூர்.

(4) முத்தையா இருக்கும் இடம் எது?

(5) இது காக்கைகள் தங்கும் தோப்பு.

(6) அகதி சொல்லும் சொல் அம்பலமேறாது.

(7) புகைவண்டி நிற்கும் நிலையங்களுட் பெரியது நியூயார்க்கில்

உள்ளது.