உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

219

தனிவாக்கியம் : பேராசிரியர் இரத்தினசாமியின் சொற் பொழிவு ஆங்கிலக் குடியரசின் சிறப்புப்

பற்றியது.

கலப்புவாக்கியம் : மகன் பட்டம் பெற்றான் என்ற செய்தி, பெற்றோர்க்கு மகிழ்ச்சியை விளைத்தது.

தனிவாக்கியம் : மகன் பட்டப்பேற்றுச் செய்தி பெற் றோர்க்கு மகிழ்ச்சியை விளைத்தது.

பயிற்சி

கீழ்வரும் பெயர்க் கிளவியக் கலப்பு வாக்கியங்களைத் தனிவாக்கியமாக மாற்றுக :

(1) உன் கருத்து என்னவென்று எனக்குத் தெரியவில்லை.

(2)

(3)

முத்துராமலிங்க சேதுபதி வழக்கில் வென்றது பெரும் பயனளிக்கவில்லை.

எதிர்காலத்தில் என்னென்ன நிகழுமென்று யார் திட்டமாய்ச் சொல்லமுடியும்?

(4) அவன் அமைதியாயிருப்பது அவனது உடன் பாட்டைத் தெரிவிக்கும்.

(5) உனக்கு அதைப்பற்றித் தெரியாது என்பது, உன் குற்றத்தை மிகுத்துக் காட்டுகின்றது.

(6) கூட்டம் தடுக்கப்படவேண்டுமென்று

(7)

பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரவு

நான் எவ்வளவு படிக்கவேண்டுமென்பது தந்தையாரின் விருப்பத்தைப் பொறுத்தது.

என்

(8) இராமலிங்க அடிகள் எப்படி மறைந்தார் என்பதைப் பற்றி, இருவேறு கருத்துகள் வழங்கிவருகின்றன.

(9)

(10)

(11)

(12)

பல தலைவர் பிரிந்துபோவது ஒரு கட்சியின் வலுவை மிகக் குறைக்கும்.

ங்கிலாந்திற்குப்போன என் நண்பன் நலத்தோடு திரும்பி வரவேண்டுமென்பது என் பேரவா.

காந்தியடிகள் தென்னாட்டிற்கு ஏன் வந்தார் என்பது எல்லார்க்கும் தெரிந்ததே.

மரம் நல்லது என்பது அதன் கனியால் அறியப்படும்.