உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




218

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(10) கணவன் மனைவியரின் குலவேறுபாட்டால் பிள்ளை களின் திறமை மிகும்.

(11) நீராவியைவிட மின்சாரம் மிகப் பயன்படுகின்றது.

(12) இன்றைக்குக் காலை ஏழு மணிக்கு மழை தொடங்கிற்று.

குறிப்பு : 'இருக்கின்ற' 'உள்ள' 'இல்லாத' 'இன்றி' முதலிய சொற்கள், பொருள் குன்றிப் பெயரெச்ச வினையெச்ச விகுதிகள் போல வழங்கின், அவற்றை யிறுதியாகக் கொண்ட சொற்றொடர்களைக் கிளவியமாகக் கொள்ளாது தனிச் சொற்களாகவே கொள்ளலாம்.

எ-டு : அறிவுள்ள, அறிவின்றி.

கலப்பு வாக்கியத்தைத் தனிவாக்கியமாக மாற்றல்

ஒரு கிளவியத்தை அல்லது பல கிளவியங்களைத் தொடர் மொழியாகவேனும் தனிச்சொல்லாகவேனும் சுருக்குவதனாலும், வாக்கிய அமைப்பை மாற்றுவதனாலும், கலப்பு வாக்கியத்தைத் தனிவாக்கியமாக மாற்றலாம்.

கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க :

கலப்புவாக்கியம் : நீ என்ன வேலை செய்கிறாய் என்பது

தனிவாக்கியம்

எனக்குத் தெரியாது.

உன்

வேலையைப்பற்றி

தெரியாது.

எனக்குத்

கலப்புவாக்கியம் : இன்னும் இருவாரத்திற்கு இருவருக்கு

தனிவாக்கியம்

மேல் கூடிப் பேசக்கூடாதென்பது, ஊர்காவல் தலைவர் ஆணை.

ஊர்காவல் தலைவர் ஆணைப்படி, இன்னும் இருவாரத்திற்கு இருவருக்கு மேல் கூடிப் பேசக்கூடாது.

கலப்புவாக்கியம் : சகதீசச் சந்திரபோசு, நிலைத்திணை

தனிவாக்கியம்

(தாவர) யுயிரிகள் எங்ஙனம்

ன்ப

துன்பம் நுகர்கின்றன என்பதை

விளக்கிக்காட்டினார்.

சகதீசச் சந்திரபோசு, நிலைத்திணை யுயிரிகளின் இன்பதுன்ப நுகர்ச்சியை விளக்கிக்காட்டினார்.

கலப்புவாக்கியம் : பேராசிரியர் இரத்தினசாமியின் சொற்

பொழிவு, ஆங்கிலக் குடியரசு சிறந்த தென்பதைப்பற்றியது.