உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




222

பயிற்சி

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கீழ்வரும் வினையெச்சக் கலப்பு வாக்கியங்களைத் தனி வாக்கியமாக மாற்றுக :

(1) எங்கெங்கு ஊர் உண்டோ, அங்கெல்லாம் நீர்நிலையுண்டு. (2) ஒருவன் உழைப்பாளியா யிருந்தால், அவன் கை உரத்திருக்கும். (3) நான் இளமையாயிருந்தபோது இவ் வீடு கட்டப்பட்டது. (4) கல்வி நிலையங்கள் ஒழுங்கா யிருப்பதற்குத் தலைமை யாசிரியர் கண்டிப்பாயிருத்தல் வேண்டும்.

(5) சிவனடியார் எந்நேரம் சென்றாலும்,

மாறநாயனார் விருந்தளிப்பார்.

ளையான்

குடி

(6) ஒருவர் பாடுபட இன்னொருவர் பலன் பெற்றார்.

(7) பனிமலை (இமயம்) தடுத்ததினால், கரிகால் வளவன் படையெடுப்பு அதற்கப்பால் செல்லவில்லை.

(8) உயிரினத்தோற்ற வகையை டார்வின் காலத்தில், வாலேசும் கண்டுபிடித்தார்.

கண்டுபிடித்த

(9) தொழிலாளி ஒத்துழைத்து முதலாளி தொழில் நடத்த வேண்டும்.

(10) ஒருவன் எந்த மருந்தை யுண்டாலும் சாவு தப்பாது.

(11)

ளங்கோவடிகட்கு உடன்பிறப்பன்பு மிக்கிருந்ததினால், அவர் இளமையிலேயே உலகப்பற்றைத் துறக்கநேரிட்டது. (12) சர் தி. முத்துசாமி ஐயர் உயர்ந்த பதவியிலிருந்தபோதும், தாழ்ந்தவருடன் அன்பாகப் பேசினார்.

(13) இலவசக் கட்டாயத் துவக்கக்கல்வி ஏற்பட்டால்தான், இந்தியா முன்னேறமுடியும்.

(14) அவன் நோய்ப்பட்டதினால் ஏராளமான வருமானம் நின்று போயிற்று.

(15) ஒருவன் குருடனாயிருந்தால் அவனுக்கு

வேண்டியதில்லை.

(16) மழை நின்றபின் கூட்டம் நடத்தப்பட்டது.

வெளிச்சம்

(17) பண்டைத் தமிழன் எவ்வளவு உயர்ந்திருந்தானோ, அவ்வளவு தாழ்ந்துள்ளான் இற்றைத் தமிழன்.