உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

223

(18) யாருக்குப் பொருள் மிகுந்திருக்கின்றதோ, அவனுக்குக் கவலை மிகுந்திருக்கும்.

(19) ஒருவன் எவ்வளவு வறியவனாயிருந்தாலும், அவனிடத்தில் செம்மையிருக்கமுடியும்.

(20) ஒருவர் பேசும்போது இன்னொருவர் பேசக்கூடாது.

(21) மருந்து இனிப்பாயிருந்தால் யாரும் குடித்துவிடுவர். (22) அரசர் உடல்நலம் பெறுமாறு கோயிலில் வழிபாடு நடந்தது. (23) நீ தீயவழியில் ஒழுகியதினால் இந்த நோய் வந்தது. (24) ஒருவன் இவ் வழியில் எந்த விடத்தில் நின்றாலும், திருவில்லிபுத்தூர்க் கோபுரம் தெரியும்.

கூட்டுவாக்கியத்தைக் கலப்பு வாக்கியமாக மாற்றல்

கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க :

கூட்டுவாக்கியம் : ஆல்பிரெடு நோபெல் ஒருவகை வெடி

மருந்தைக் கண்டுபிடித்தார்; அதனால்

அவருக்குப் பெரும் பொருள் திரண்

டது.

கலப்புவாக்கியம்: ஆல்பிரெடு நோபெல் ஒருவகை வெடிமருந்தைக் கண்டுபிடித்ததினால்,

அவருக்குப் பெரும்பொருள் திரண்டது. கூட்டுவாக்கியம் : மழை பெய்கிறது; அதோடு காற்றடிக்

கிறது.

க்

கலப்புவாக்கியம் : மழை பெய்யும்போதே காற்றும் அடிக்

கூட்டுவாக்கியம் :

கிறது.

சிலர் முன்னேற்றத்திற்கு வழிகோலு கின்றனர்; சிலர் அதற்கு முட்டுக் கட்டை போடுகின்றனர்.

கலப்புவாக்கியம்: சிலர் முன்னேற்றத்திற்கு வழிகோல, சிலர் அதற்கு முட்டுக்கட்டை போடு கின்றனர்.

கூட்டுவாக்கியம் : பயிர் விளைந்தது; ஆனால், வெள்ளத்

தினால்

அழிந்துவிட்டது; அதனால்

பயன் இல்லாதுபோயிற்று.

கலப்புவாக்கியம்: பயிர் விளைந்தும் வெள்ளத்தினால்

அழியுண்டு பயன் இல்லாது போயிற்று.