உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




224

கூட்டுவாக்கியம் :

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

நீ நேர்மையாய் நடந்துகொள்ள வேண் டும்; இல்லாவிட்டால் மானம் கெடும்; வேலையும் போய்விடும்.

கலப்புவாக்கியம் : நீ நேர்மையாய் நடந்துகொள்ளா

கூட்டுவாக்கியம் :

விட்டால், மானங்கெட்டு வேலையும் போய்விடும்.

சில சீர்திருத்தங்கட்குச் சட்டம் இடந்தர வில்லை; ஆகையால் சட்டத்தை மாற்றவேண்டும்.

கலப்புவாக்கியம் : சில சீர்திருத்தங்கட்குச் சட்டம் இடந் தராததினால், அதை மாற்ற வேண்டும்.

பயிற்சி

கீழ்வரும் கூட்டு வாக்கியங்களைக் கலப்பு வாக்கியங்களாக

மாற்றுக:

(1) இன்று எனக்குச் சம்பளம் வரவில்லை; அதனால் ஊருக்குப் போகமுடியவில்லை.

(2) கேள், கிடைக்கும்.

(3) காசுமீரத் தொல்லை நீங்கவேண்டும். இல்லாவிட்டால் இந்தியாவில் அமைதி இராது.

(4) பழையகாலத்தில் படிப்புவசதி குறைவு; இருந்தாலும், பலர் திறமையாய்ப் படித்திருந்தனர்.

(5) குண்டு படும்; குருவி விழும்.

(6) நாளைக்கு ஆள்வரும்; இல்லாவிட்டால் கடிதம் வரும்.

(7)

களவு மிகுகிறது; ஆகையால் காவல் மிகவேண்டும்.

(8) வருமானம் மிகுதிதான்; ஆயினும், சிறிதும் மிஞ்சவில்லை. (9) அவன் கடன் வாங்கிக்கொண்டே போகின்றான்; அதனால், அவன் செல்வம் குறைந்துகொண்டே வருகின்றது.

(10) எத்தனையோ வாய்ப்புகள் வந்தன; ஆயினும், ஒன்றைக் கூடப் பயன்படுத்தவில்லை.

(11) தக்க பயிற்சி யிருக்கவேண்டும்; இருந்தால், இன்றும் கடும்பா (ஆசுகவி) பாடலாம்.

(12) பிறர் குற்றத்தைப் பார்ப்பவர் மிகப் பலர்; பிறர் குணத்தைப் பார்ப்பவர் மிகச் சிலர்.

(13) பெற்றோர் நல்லவரா யிருக்கவேண்டும்; அப்படியானால் பிள்ளைகளும் நல்லவரா யிருப்பர்.