உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

225

(14) உலகில் அறிவு மிகுந்துவருகின்றது; அதே சமையத்தில் ஒழுக்கமின்மையும் மிகுந்துவருகின்றது.

(15) ஒருவன்

குற்றஞ்

செய்கின்றான்;

தண்டனையடைகின்றான்.

ன்னொருவன்

(16) அமராபண சீயகங்கன் ஏவினான்; பவணந்தி முனிவர் இயற்றினார்.

(17) உயிர் போகலாம்; ஆனாலும், ஒழுக்கம் தப்பக் கூடாது. (18) ஆண்மகன் முன் நின்று எய்வான்; பேடி பின் நின்று எய்வான். (19) குமரப்பன் கோபக்காரன்; ஆயினும், கொடையாளி.

(20) மக்கள்தொகை மிகக்கூடாது; மிகுந்தால், போர் மிகும். (21) பகுத்தறிவைப் பயன்படுத்தவேண்டும்; இல்லாவிட்டால், உயர்திணைத்தன்மை நீங்கும்.

(22) யாரும் வருக; ஆயின், தமிழ்ப்பகைவன்மட்டும் வரற்க. (23) எம்மொழியும் பேசுக! ஆயின், அது தூய்மையா யிருக் கட்டும்.

(24) ஆசிரியன் அறிவிக்கின்றான்; அதனால் அனைவரும் அறிகின்றனர்.

கலப்பு வாக்கியத்தைக் கூட்டுவாக்கியமாக மாற்றல்

கீழ்வரும் வாக்கிய இணைகளை ஆய்க :

கலப்புவாக்கியம் : இக்காலத்தில் எத்துணையோ சிறந்த கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பினும்,

தாசுமகாலுக்கு ஈடாக ஒன்றுமில்லை.

கூட்டுவாக்கியம் : இக்காலத்தில் எத்துணையோ சிறந்த கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன;

ஆயினும், தாசுமகாலுக்கு ஈடாக ஒன்றுமில்லை.

கலப்புவாக்கியம் : திரைப்படம் வந்ததனால்

நின்றது.

நாடகம்

கூட்டுவாக்கியம் : திரைப்படம் வந்தது; நாடகம் நின்றது.

கலப்புவாக்கியம் : அவன் கட்டிய வீடு விழுந்துவிட்டது. கூட்டுவாக்கியம் : அவன் ஒரு வீடு கட்டினான்; ஆனால், அது விழுந்துவிட்டது.