உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




226

கலப்பு வாக்கியம் :

கூட்டுவாக்கியம் :

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

ஒவ்வொருவனும்

தன்னைப்போல்

பிறனும் வாழவேண்டுமென்று விரும்ப வேண்டும்.

ஒவ்வொருவனும் தன் வாழ்வையும் விரும்ப வேண்டும்; பிறன் வாழ்வையும் விரும்பவேண்டும்.

ஊரார் புகழ விருந்துவைத்தான்.

கலப்புவாக்கியம் :

கூட்டுவாக்கியம் :

ஊரார் புகழ்ச்சியை விரும்பினான்; அதற்காக விருந்துவைத்தான்.

கலப்புவாக்கியம் :

கூட்டுவாக்கியம் :

நாள்தொறும் உலவிவந்தால் நலம் கிடைக்கும்.

நாள்தொறும் உலவி வா; நலம் கிடைக்கும்

கலப்புவாக்கியம் : செண்டத்தூர் ஐயாத்துரை முதலியார்

செல்வத்தை யிழந்த பின்பும், இரவலரும்

இரப்போரும் அவரால் புரக்கப் பெற்றனர்.

கூட்டுவாக்கியம் :

செண்டத்தூர் ஐயாத்துரை முதலியார்

செல்வத்தை யிழந்தார்; அதன் பின்பும் இரவலரையும் இரப்போரையும் புரந்தார்.

பயிற்சி

கீழ்வரும் கலப்பு வாக்கியங்களைக் கூட்டுவாக்கியமாக

மாற்றுக:

(1) புரட்சிப் பாவலர் பாரதிதாசன் எழுத்தாளியா யிருக்கிற வளவு பேச்சாளியா யில்லை.

(2) அவனுக்கு ஆங்கிலம் தெரியாவிட்டாலும், தெரிந்தது போற் காட்டிக்கொள்ளுகிறான்.

(3) விழிப்பாயிராவிட்டால் வேலை போய்விடும்.

(4) ஒருநாளைக்கு ஆறு மணிநேரம் எழுதினால், ஓராண் டிற்குள் புத்தகம் முடிந்துவிடும்.

(5) அவன் பலமுறை பயிரிட்டும் ஒருமுறையும் விளைய வில்லை.