உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

(6) வேகமாய்ப்போனால் வண்டி கிடைக்கும்.

227

(7) இரஞ்சிட்சிங்கு ஒரு கண் குருடாயிருந்தாலும், அவன் படைமறவர் அவனைக் கண்டு நடுங்கினர்.

(8) அவ்விடத்திற் புலியிருக்கின்றதினால், அங்கொருவரும் போகவேண்டா.

(9) அக் குடிசை குருவிகட்டிய கூடுபோன்றதாயினும், ஒருவன் அதிற் குடியிருக்கமுடியும்.

(10) பலமுறை பட்டும் எனக்கு மதிவரவில்லை.

(11) இக்காலத்தில், கற்றவர்

கல்லாதவர் கெட்டிலர்.

கெட்டிருப்பதைப்போலக்

(12) அழைப்பில்லாமல் நான் வரமுடியாது.

(13) பல கடைகள் பார்த்தும் ஆலைத்துணி கிடைக்கவில்லை. (14) பொருள் வாங்குவோர் கடைகாரர் உதவியை நாடும் நிலை என்று நீங்குமோ!

(15) பங்கீட்டுத் தவறே யொழிய அரிசித் தட்டில்லை.

(16) ஆள் குடியிராவிட்டாலும் வீடு வீடுதான்.

(17) சேம (Reserve)வூர்காவலர் வந்து கலகம் அடங்கிற்று.

(18) வழக்காளி குறை என்னவென்பதையும், எதிர்வழக்காளி குறை என்னவென்பதையும், தீர்ப்பாளர் கவனிக்க வேண்டும். (19) கடவுளிருக்கிறார் என்னும் கொள்கைக்கும், கடவுளில்லை யென்னும் கொள்கைக்கும், ஏதுக்கள் உள.

(20) நான் எம்.ஏ. வரை என் செலவிற் படிக்க வைத்த ஏழைப்பயல், எனக்குக் கேடு சூழ்ந்தான்.

(21) வெற்றி உறுதியில்லாவிட்டாலும், முயற்சியை விட்டு விடாதே.

(22) கண் மருத்துவம் பயிலாதவர் விற்கும் கண்ணாடி விலை குறைவாயிருப்பினும், வாங்குதல் கூடாது.

(23) நான் அந்தப் பாம்பைக் கண்டிருந்தால் எப்படியாவது கொன்றிருப்பேன்.

(24) வணக்கமாய் வினவினால் வணக்கமான விடை கிடைக்கும்.