உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




254

ஒற்றைக்குறி வருமிடங்கள்

i. தற்சுட்டு.

தற்சுட்டு என்பது,

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

ஓர் எழுத்தேனும் சொல்லேனும்

சொற்றொடரேனும் தன்னையே குறித்தல்.

எ-டு: எ

‘எ'

‘என்று’

'என்று சொன்னான்’

ii. வாய்பாடு.

எ-டு : 'செய்யும்', 'தான'

iii. வழக்கருகிய அல்லது புதுக்குறியீடு.

எ-டு : ஒருவன் தனக்குத் தாழ்வு வந்தவிடத்து, ஊருக்கு வடபுறத்தில் உண்ணா நோன்பிருந்து உயிர்துறத்தல், 'வடக்கிருத்தல்' எனப்படும்.

மெய்யிறுதியில் வரும் உடம்படுமெய்யை 'மெய்யீற்றுடம் படுமெய்' என்பர் நச்சினார்க்கினியர்.

iv. பிறர் கூற்றுப்பகுதி.

எ-டு : 'இணரெரி தோய்வன்ன இன்னா' செய்பவர்.

V. பிறர்குறி மேற்கோள்.

‘நெல்லிக்காய் மூட்டை' யென்று சில செய்தித்தாளாசிரியரால் குறிக்கப்படும் குழுவினர் யார்?

vi. கட்டுரைப் பெயரும் நூற்பெயரும்.

காலஞ்சென்ற பா.வே. மாணிக்க நாயகர், 'கம்பன் புளுகும் வால்மீகி வாய்மையும்' என்றொரு கட்டுரை வரைந்துள்ளார். 'செந்தமிழ்ச்

செல்வி'யின் ஆண்டுக் கையொப்பம்

ரூ. 4. மறைமலையடிகள் எழுதிய, 'மக்கள் நூறாண்டு வாழ்வதெப்படி?' என்னும் நூலின் முதற்பகுதிதான் இன்று கிடைக்கும்.

vii. மேற்கோட்குள் மேற்கொள்.

எ-டு : இயேசு மக்களை நோக்கி, “ஆயக்காரன் கோயிற்கு வெளியே நின்று, 'தேவனே! தீயேனாகிய என்பால் இரக்கங்கொள்ளும்,' என வேண்டினான்” என்றார்.