உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

5. வினாக்குறி (Note of Interrogation)

253

ஒரு வினாவாக்கியம், முற்று வாக்கியமாயும் நேர்கூற்று வாக்கியமாயுமிருப்பின், இறுதியில் வினாக்குறி பெறும்; நேரல் கூற்று வாக்கியமாயும் புணர்ச்சிபெற்ற நேர்கூற்று வாக்கியமாயு மிருப்பின், வினாக்குறி பெறாது.

எ-டு : அது என்ன?

"நீ வருகிறாயா?” என்று கேட்டான்.

நான் போவேனா என்பதாகக் கேட்டான். நீ வருகிறாயா வென்று கேட்டான்.

6. வியப்புக்குறி (Note of Exclamation)

வியப்புக்குறி, வியப்பிடைச் சொல்லுக்குப்பின்பும், நேர்கூற்று வியப்புவாக்கிய விறுதியிலும் வரும்.

எ-டு : ஆகா!

“என்னே இதன் பெருமை!” என்றான்.

நேர்கூற்று வியப்பு வாக்கியமாயினும், புணர்ச்சி பெற்றதாயின்

வியப்புக்குறி பெறாது.

எ-டு : என்னே யிதன்பெருமை யென்றான்.

7. விளிக்குறி (Vocative Sign)

-டு : அவைத்தலைவீர்! அவையீர்!

உடன்பிறப்பாளரே! உடன்பிறப்பாட்டியரே!

8.மேற்கோட்குறி (Quotation Marks or Inverted Commas)

மேற்கோட்குறி, ஒற்றைக்குறி

இருவகைப்படும்.

இரட்டைக்குறி வருமிடங்கள்:

i. நேர்கூற்று.

"நான் வருகிறேன்," என்றான்.

ii. மேற்கோள்.

இரட்டைக்குறி என

"மநு என்பவன், நாகரிக ஒழுக்கத்திற் சிறந்த ஒரு திராவிட மன்னன்,” என்றார் மறைமலையடிகள்.

"ஒழுக்கமுடைமை குடிமை," என்றார் திருவள்ளுவர்.