உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




252

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

iv. ஒப்புநோக்காய்வரும் பெருங்கூட்டு வாக்கியம்.

எ-டு : கல்வி வெள்ளத்தாலழியாது; நெருப்பால் வேகாது; திருடரால் திருடப்படாது; பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்க நிறையும்; செல்வமோ வெள்ளத்தாலழியும்; நெருப்பால் வேகும்; திருடரால் திருடப்படும்; பிறர்க்குக் கொடுக்கக் கொடுக்கக் குறையும்.

4. முற்றுப்புள்ளி (Full Stop or Period) வருமிடங்கள்

1. தலைப்பின் இறுதி.

எ-டு : மரபியல்.

11. வாக்கிய இறுதி.

எ-டு : உருவத்தில் மாந்தரா யிருப்பவரெல்லாம் உண்மையில் மாந்தரல்லர்.

iii. வாக்கிய வுறுப்பாய் வராத மேற்கோள் இறுதி. எ-டு : “அன்புஞ் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்."

"பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்."

99

-

திருமூலர்.

-திருவள்ளுவர்.

“தமிழ் வடமொழித் துணையின்றித் தனித்து வழங்குவது மட்டுமன்று, தழைத்தோங்கவும் வல்லது.’ - கால்டுவெல். "ஆரியருட் சாதிவகுப்பு இல்லை.”

66

iv. முகவரி யிறுதி.

எ-டு : திருவாளர்

மறைமலையடிகள்.

பிரகாசம் சாமுவேல் அவர்கள், பி.ஏ.,

எல்.டி., ஓய்வுபெற்ற தலைமையாசிரியர், வாணக்காரக்

கொல்லை, ஆம்பூர், வடார்க்காட்டு மாவட்டம்.

V. தேதியிறுதி.

எ-டு : 1-8-1950.

vi. சொற்குறுக்கம்.

எ-டு : தொல். சொல். 58.

கி.மு. 500.

வே. பா. கமலநாத முதலியார்.

vii. மணிப்பிரிவு.

எ-டு: 2.30 (2/2)

viii கையெழுத்து.

T.G. நாகலிங்கம் பிள்ளை.