உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




26

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

மேற்கண்ட ஒவ்வொரு வாக்கிய இணையிலும், முதலாவது ஒரு தனிச்சொல் ஒரு பெயரைத் தழுவி அப் பெயராற் குறிக்கப்பட்ட பொருளை வரணிக்கின்றது. பின்பு ஒரு தொடர்ச்சொல் அதே பெயரைத் தழுவி அங்ஙனமே அப் பெயராற் குறிக்கப்பட்ட பொருளை வரணிக்கின்றது.

எடுத்துக்காட்டாக, நல்ல என்னும் தனிச்சொல்லும் நல்ல குணமுள்ள என்னும் தொடர்ச்சொல்லும் பிள்ளை என்னும் ஒரே பெயரைத்தழுவி, அப் பெயராற் குறிக்கப்பட்ட பொருளை ஒரே வகையில் வரணிக்கின்றன. நல்ல என்னும் பெயரெச்சம் போன்றே நல்ல குணமுள்ள என்னும் தொடர்ச்சொல்லும் பெயரைத் தழுவுவதால், பெயர்த்தொடர்மொழி எனப்படும்.

பெயரெச்சத்தின் தொழிலைச் செய்யும் தொடர்மொழி பெயரெச்சத் தொடர்மொழி.

குறிப்பு : தொகைதொடர் இலக்கணப்படி, மேற்கண்ட வாக்கிய இணைகளிலுள்ள 'பொன்நகை' 'காட்டு விலங்கு' 'புள்ளிமான்' என்பவை வேற்றுமைத்தொகை என்றும், 'செந்தாமரை' என்பது பண்புத்தொகை என்றும், தமிழிலக்கண நூல்களிற் கூறப்படினும்; அங்ஙனம் கூறுவது புணரியலுக்குரிய தொடர்ச்சொல் இலக்கணமென்றும்,மேற்காட்டிய தொடர்ச்சொற்களிலுள்ள ‘பொன்', 'காட்டு', 'புள்ளி', 'செம்' என்ற நிலைச்சொல் நான்கும் தனிப்பட்ட முறையில் பெயரெச்சம்போல் ஒவ்வொரு பெயரைத் தழுவி நிற்பதால் உண்மையில் பெயரெச்சமே யென்றும், சொல்லிலக்கணம் கூறுவது தனிச் சொல்லுக்கேயன்றித் தொடர்ச்சொல்லுக்கன்று என்றும், சொல்வடிவு எதுவாயினும் ஆட்சி (பிரயோக)ப்படியே சொல்வகை யறியப்படும் என்றும் அறிந்துகொள்க.

பயிற்சி (1)

பெயரெச்சத் தொடர்

பின்வரும் வாக்கியத்திலுள்ள

மொழிகளை எடுத்தெழுதுக :

(1) னிய சுவையுள்ள பண்டம் எல்லார்க்கும் ஏற்கும்.

(2) குறுகிய அளவுள்ள பாவகைகளுள் குறள் ஒன்று.

(3) செல்வம் மிகுந்த மக்கட்குச் செருக்கு இயல்பு.

(4) தீமை விளைக்கும் பொருள்களைத் தீண்டுதலும் கூடாது. (5)

தேரோட்டம் சித்திரை மாதம் நடக்கும் திருவிழா.

(6) குளிர்ந்த நிலையிலுள்ள நீர் கோடைக் கேற்றது.

(7) பேய்த்தன்மையுள்ள மாந்தர் நன்மைக்கும் தீமை செய்வர்.