உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

பயிற்சி

25

பின்வரும் வாக்கியங்களிலுள்ள பெயர்த்தொடர் மொழி

களைக் குறிப்பிடுக :

(1)

ல்லையென்பவர்க்கு

யாளிகளின் இயல்பு.

ல்லையென்னாமை கொடை

(2)

(3)

(4)

(5)

(6)

(7)

(8)

'எப்படிப் பாடினரோ' மிக நல்ல பாட்டு.

பிறர்நலம் பேணுதல் மக்கட்பண்பிற்கு இன்றியமையாத

குணம்.

உடலைப் பேணாமை அறிவுள்ள செயலன்று.

குரங்கிற்குக் கூடுகட்டத் தெரியாது; ஆனால், கட்டின கூட்டைப் பிரிக்கத் தெரியும்.

மதுரை பாராதவன் மாபாவி.

ஆத்திசூடியும் கொன்றைவேந்தனும் தமிழ்ச்சிறார் படிக்கும் ஒழுக்க நூல்கள்.

இப்போது எதைப் பேசுவது என்று தெரியவில்லை.

பெயரெச்சத் தொடர்மொழி (Adjective Phrase)

பெயரெச்சம்போற் பெயரைத் தழுவும் தொடர்மொழி

பெயரெச்சத் தொடர்மொழியாம்.

பின்வரும் வாக்கிய இணைகளை ஆய்க :

(1) நல்ல பிள்ளைக்கு ஒரு சொல்.

(2)

நல்ல குணமுள்ள பிள்ளைக்கு ஒரு சொல்.

பொன் நகை வெள்ளி நகையைவிட விலையுயர்ந்தது. பொன்னால் செய்யப்பட்ட நகை

வெள்ளியால்

செய்யப்பட்ட நகையைவிட விலையுயர்ந்தது.

(3)

காட்டு விலங்கு மிகக் கொடியது.

காட்டில் வாழும் விலங்கு மிகக் கொடியது.

(4)

செந்தாமரை திருமகளுக்கு உறைவிடம்.

செந்நிறமான தாமரை திருமகளுக்கு உறைவிடம்.

(5) புள்ளிமான் பார்வைக்கு அழகானது.

புள்ளியுடைய மான் பார்வைக்கு அழகானது.

(6) சாரணனுக்கு எப்போதும் சிரித்த முகம் இருக்க வேண்டும். சாரணனுக்கு எப்போதும் சிரிப்போடு கூடிய முகம் இருக்கவேண்டும்.