உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




24

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

எழுவாயும் செயப்படுபொருளுமாதலும் வேற்றுமையேற்றலும், பெயர்த்தன்மையாம்.

ஒரு தொடர்புபட்டுப் பெயரில் முடிவனவும் பெயர்போற் பயன்படுவனவுமான சொற்றொடர்களெல்லாம் பெயர்த்தொடர் மொழிகள்.

எ-டு : (1) காலையில் எழுந்திருத்தல் காக்கையின் சிறந்த குணங்களுள் ஒன்று.

இவற்றுள் :

(2) (வானொலிப் பெட்டியை) எப்படிப் பயன்படுத்துவ தென்பது பலர்க்குத் தெரியாது.

(3) ஒருபாற் கோடாமை சான்றோர்க்கு அணி.

(4) கண்ணப்பனுக்குப் பாட்டுப்பாடத் தெரியும். (5) ‘நற்றா மரைக்கயத்தில்' உனக்குத் தெரியுமா?

(1)-லும் (2)-லும் (3)-லும் உள்ள பெயர்த் தொடர்கள் பெயரில்

முடிவன

(4)-ல் உள்ள 'பாட்டுப்பாட' என்பது, பாட்டுப்பாடுதல் என்று பொருள்படுவதாகும். இதைத் தொழிற்பெயர் நிகழ்கால வினை யெச்சம் (Noun Infinitive) என்னலாம்.

(5)-ல் உள்ள 'நற்றா மரைக்கயத்தில்' என்பது அங்ஙனம் தொடங்கும் வெண்பாவைக் குறிக்கும். இங்ஙனமே எல்லாப் பாட்டு முதற்குறிப்புகளும் அவ்வப் பாட்டைக் குறிக்கும் பெயர்த்தொடர் மொழிகளாம்:

இந் நால்வகைப் பெயர்த்தொடர்களுள்ளும், நிகழ்கால வினையெச்சத்தில் (Infinitive mood) முடியும் தொடர் வேற்றுமை யேற்காது; ஏனைய மூன்றும் வேற்றுமையேற்கும்.

எ-டு : காலையி லெழுந்திருத்தலைச் சிறந்த பழக்கமாகக் கூறுவர்.

வானொலிப் பெட்டியை எப்படிப்

தென்பதைப் பலர் அறியார்.

'நற்றா மரைக்கயத்திலை' ப் பாடியவர் யார்?

பயன்படுத்துவ