உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

(8) கண்டேன் காதலியை.

(9) என்னதைச் சொல்லி என்ன பயன்.

(10) எல்லார்க்கும் விடுதலை.

(11)

கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்.

(12) கைபட்டாற் கண்ணாடி.

(13) “ஊரெலாம் சேற்று நாற்றம்".

(14) மீன்சாறோ தேன்சாறோ.

(15) ஆயிரம் பிறை கண்டவன்.

(16) ஆற்றில் ஒருகால் சேற்றில் ஒருகால்.

(17) ஆல் பழுத்தால் அங்கே, அரசு பழுத்தால் இங்கே.

(18) ஆகட்டும் ஆகட்டும்.

(19) என்று விடியும் எனக்கு?

(20) ஆசிரியன் பாரத்துவாசி நச்சினார்க்கினியன்.

(21) தொன்றுதொட்டு இன்றுகாறும்.

(22) “எல்லார்க்குங் கள்ளனாய் ஏழ்பிறப்புந் தீயனாய்".

(23) உண்டே மறுமை!

23

(24) நல்லநல்ல குதிரையெல்லாம் கொள்ளைத் தின்னும்போது. (25) பிறபின்.

5. தொடர்மொழி வகைகள் (Phrase)

தொடர்மொழிகள்,

(1) பெயர்த் தொடர்மொழி, (2) பெயரெச்சத் தொடர்மொழி, (3) வினையெச்சத் தொடர்மொழி,

என மூவகைப்படும்.

பெயர்த் தொடர்மொழி (Noun phrase)

பெயர்த்தன்மையுடைய (அல்லது பெயரின் தொழிலைச் செய்யும்) தொடர்மொழி, பெயர்த் தொடர்மொழியாகும்.