உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




22

4.தொடர்மொழி

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

எழுவாயும் பயனிலையும் அமையாத சொற்றொடர்கள், தொடர்மொழி எனப்படும்.

எ-டு : (1) கையெழுத்து,

(2) தெற்கும் வடக்கும்,

(3) இலைமறை காய் போல்,

(4) அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப் பொருள்

நான்கும்,

(5) இளமையிலேயே

இலக்கண

விலக்கியங்களை

யெல்லாம் முற்றக் கற்பதற்கு.

இத் தொடர்கள் எழுவாய் பயனிலையில்லாதவை; அல்லது அவற்றுள் ஒன்றையே கொண்டவை; அதனால், தொடர்மொழி எனப்படுவன.

குறிப்பு : வாக்கிய உறுப்புகளின் தொகையை அல்லது சொற்றொடர்களின் இயல்பை நோக்கின், தொடர்மொழி, கிளவியம்,வாக்கியம் என்ற முறையில் கூறுவதே பொருத்தமா யினும், எழுவாய் பயனிலை யறிவு அம் மூன்றன் உணர்ச்சிக்கும் வேண்டுதலின், அவ் வுறுப்புகள் நிரம்பிய வாக்கியம் முன்னும், அவை நிரம்பாக் கிளவியம் இடையும், அவையில்லாத் தொடர்மொழி இறுதியும் கூறப்பட்டன என அறிக.

பயிற்சி

பின்வரும் சொற்றொடர்களுள் ஒவ்வொன்றும் (தொடர்மொழி, கிளவியம், வாக்கியம் என்னும்) மூவகைத் தொடர்களில் எதுவென்று குறித்து, அதற்குக் காரணமுங் காட்டுக; (1) வடமொழி தென்மொழி யிரண்டிலும் வல்லுநரான சிவஞான முனிவர்.

(2) அழுத கண்ணும் சிந்திய மூக்கும்.

(3) ஓவியம் சித்திரம்.

(4) முன்னுக்குப்பின் முரண்.

(5)

"பொன்போலும் கள்ளிப் பொறிபறக்கும் கானலிலே.

(6) சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். (7) கோடியுந் தேடிக் கொடிமரமும் நாட்டி.