உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

(18) இன்றைக்கு ஆவணி, நாளைக்குப் புரட்டாசி.

(19) எனக்கும் பங்கு, என் மகனுக்கும் பங்கு.

(20) அழகனுக்கு ஆண்டுச் சம்பளம், மாதச் சம்பளமன்று.

(21) பார்த்துப் போ.

(22) சொன்னபடி செய்.

(23)போகப் போகத் தெரியும்.

21

(24) கண்டால் காமாட்சி நாயகர், காணாவிட்டால் காமாட்டி நாயகர்.

(25) பாலுக்குச் சருக்கரை, கூழுக்கு உப்பு.

3. கிளவியம் (Clause)

எழுவாயும் பயனிலையும் அமைந்து கருத்து முடியாத சொற்றொடர்கள், கிளவியம் எனப்படும்.

எ-டு : (1) நான் சொல்லி.

(2) நான் சொல்லி இருநாளுக்குப் பின்பு.

(3) அரசனே வந்து என்னை அழைத்தாலும்.

(4) கம்பர் பாட்டுகளிற் பல இடைச்செருகல் என்று.

(5) நான் உன்னை ஒருபோதும் கைவிடேன் என் று

சொன்ன.

வை எழுவாயும் பயனிலையும் அமைந்த சொற்றொடர் களாயினும், கருத்து முடியாமையின் கிளவியமாயின.

இவற்றுள்

(3)-

(1)-லும் (2)-லும், 'நான்' எழுவாய்; 'சொல்லி' பயனிலை. ல், 'அரசனே' எழுவாய்; 'அழைத்தாலும்' பயனிலை. இவற்றில் ஒன்றிலேனும் முற்றுச்சொல் பயனிலையா யில்லாமையால், கருத்து முடியவில்லை. (4)-ல், 'பல' எழுவாய்; 'இடைச்செருகல்' பயனிலை. (5)-ல், 'நான்' எழுவாய்; 'கைவிடேன்' பயனிலை. இவற்றில், பயனிலைகள் முற்றுச் சொல்லாயினும், ‘என்று' ‘என்று சொன்ன’ என்னும் சொல்லோடும் சொற்றொடரோடும் சேர்ந்து விட்டதனால், தம் முற்றுத் தன்மையை இழந்துவிட்டன.

,