உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




20

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

(24) இற்றைத் தமிழ் நூல்களுக்குள் தொல்காப்பியம் மிகப்

(25)

பழைமையானது.

'காரிகை கற்றுக் கவி பாடுவதினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்று’.

பயிற்சி (2)

பின் வரும் வாக்கியங்களில் தொக்குள்ள எழுவாய் பயனிலை செயப்படுபொருள்களை விரித்தெழுதுக :

கவனிப்பு : விரிக்கும் சொல் எதுவாயினும்

பொருத்தமா யிருந்தாற் போதும்.

(1) தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கலாமா?

(2) ஒன்று சொன்னால் ஒன்பது சொல்வான்.

(3) இருவீட்டுக்கு ஒரு முகடு.

(4) தவத்திற் கொருவர், கல்விக்கிருவர், வழிக்கு மூவர். (5) குட்டித் திருவாசகம் என்று எதற்குப் பெயர்? (6) தன் குற்றம் இருக்கப் பிறர்குற்றம் பார்க்கிறதா?

(7) நின்றால் நெடுஞ்சுவர், விழுந்தால் குட்டிச்சுவர்.

ஆகுக;

(8) சித்திரை என்று சிறுக்கிறதுமில்லை, பங்குனி என்று பருக்கிறதுமில்லை.

(9)

ஒன்றே செய்யவும் வேண்டும்; ஒன்றும் நன்றே செய்யவும் வேண்டும்; நன்றும் இன்றே செய்யவும் வேண்டும்.

(10) துளித் துளியாய் வெள்ளமா? துடுமென்று வெள்ளமா?

(11) குத்துக் குத்தாய் நட்டால், கோட்டை கோட்டையாய்

விளையுமா?

சும்மா இரு.

(12)

(13)

பேசினால் மெல்லப் பேசவேண்டும்.

(14) எங்குப் பார்த்தாலும் வெள்ளம்.

(15)

நாளைக்கு என்ன செய்கிறது?

(16) சோற்றுக்குத்தான் பஞ்சம், சொல்லுக்கும் பஞ்சமா?

(17) விதைத்தவன் அறுக்கிறான்.