உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

19

(6)

காலம் செய்வது ஞாலம் செய்யாது.

(7) திராவிடமொழிகள் மொத்தம் பதின்மூன்று.

(8) நாற்பதடுக்கு மாடிகள் நியூயார்க்கில் பல உள.

(9)இருக்கும் பிள்ளை மூன்று, ஓடும் பிள்ளை மூன்று, பறக்கும் பிள்ளை மூன்று.

(10) ஒன்று 'விடியட்டும் விடியட்டும்' என்கிறது; ஒன்று 'விடிய வேண்டா விடிய வேண்டா' என்கிறது; ஒன்று 'விடிந்தாலும் சரி, விடியாவிட்டாலும் சரி' என்கிறது.

(11)

திருநாவுக்கரசர் திருஞான சம்பந்தர் சுந்தரமூர்த்திகள் எனத் தேவார ஆசிரியர் மூவர்.

(12) தனித்தமிழை வளர்த்த பெருமை பல்லவபுரம் பொ து நிலைக் கழகத் தலைவர் தெய்வத்திரு மறைமலையடி கட்குரியது.

(13) மாவலி (மகாபலி) ஒரு மாட்சிமை பெற்ற திராவிடப் பேரரசன்.

(14) தொல்காப்பியத்திற் சொல்லப்பட்ட எண்வகை வனப்புள் யைபுவகைப்பட்டவை, சிலப்பதிகாரமும் மணி

(15)

மேகலையும்.

மின்னுவதெல்லாம் பொன்னாமா?

(16) திருக்குறள், அறத்துப்பால் பொருட்பால் காமத்துப்பால் என மூன்று பால்களையுடையது.

(17) வருவது வந்தே தீரும்.

(18)

"

"வெள்ளைக் கில்லை கள்ளச் சிந்தை "

(19) பண்டைத் தமிழ்நாட்டில் தமிழை வளர்க்க மூன்று சங்கங்கள் இருந்தன.

(20) குறிஞ்சிநிலத் தமிழ்மக்கள் தொன்றுதொட்டு முருகனை வணங்கி வருகின்றனர்.

(21) பழந்தமிழ்நாட்டின் பெரும்பகுதியாகிய குமரிநாடு கடலுள் முழுகிக் கிடக்கின்றது.

(22) ஒருகாலத்தில் பனிமலை (இமயம்) கடலுக்குள் இருந்தது. (23) தமிழ், இந்திய மொழிகளுக்குள் மிக முந்தியது.