உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




18

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

குறிப்பு : இத்தகைய செயப்படுபொருளை உறவுடைச் செயப்படுபொருள் (Cognate Object) என்பர் ஆங்கில இலக்கணியர்.

(7) (பற்பல) தொழில் குறிக்கும் வினைகட்குரிய செயப்படு பொருள், சொல்லாமல் அறியக்கூடிய இடங்களில் தொகும்.

எ-டு: உழவன் (நிலத்தை) உழுகிறான்.

(நிலத்தை) அகல உழுவதினும் ஆழ உழுவது நல்லது.

குயவன் (கலங்களை) வனைகிறான்.

சில வாக்கியங்களில் எழுவாய் செயப்படுபொருள் இரண்டும் ஒருங்கே தொகும்.

எ-டு : (ஒருவன் ஒன்றைச்) சொன்னால் (இன்னொருவன் அதைக்) கேட்கவேண்டும்.

குறிப்பு : பல எழுவாய்களும் பயனிலையும் தொக்கு நிற்பன, பழமொழிகளும் அவற்றைப்போற் சுருக்கமான வணிகக் கூற்றுகளும் உரையாட்டு வாக்கியங்களுமாகும். மாணவர் எழுதும் கட்டுரைகளில், இத்தகைய தொகைநடையைக் கையாளுதல் கூடாது; இயன்றவரை வாக்கிய உறுப்புகளை யெல்லாம் விரித்தே யெழுதுதல் வேண்டும். உறவினருக்கும் நெருங்கிய நண்பருக்கும் எழுதும் கடிதங்களிலும் விளம்பரம் வணிகக்கடிதம் முதலிய வற்றிலும் இத்தகைய தொகைநடையைக் கையாளலாம்.

எழுவாய் பயனிலையில்லாமல் வாக்கியமில்லை என்பதை அறிவித்தற்கும், வாக்கியக் கூறுபடுப்பில் வாக்கியவுறுப்புகளைக் குறிக்கும்போது தொகை எழுவாய் பயனிலை செயப்படு பொருள்களை வருவித்துக்கொள்ளும் வகையைக் காட்டற்குமே, எழுவாய் பயனிலை செயப்படுபொருள்கள் தொகுமிடங்கள் இங்குக் கூறப்பட்டன என அறிக.

பயிற்சி (1)

பின்வரும் வாக்கியங்களிலுள்ள

செயப்படு பொருள்களைக் குறிப்பிடுக :

எழுவாய் பயனிலை

(1) தண்ணீரும் மூன்று பிழை பொறுக்கும்.

(2) பெற்றவர்களுக்குத் தெரியும் பிள்ளையி னருமை. (3) ஒருநாட் காய்ச்சல் ஆறுமாத வலுவைப் போக்கும். (4) பிறப்பால் சிறப்பில்லை.

(5) எல்லார்க்கும் ஒவ்வொன் றெளிது.