உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

செயப்படுபொருள் தொகும் இடங்கள்

17

(1) உரையாட்டில், முன் தொடர்பினால் பொருளுணர்த்தும் வாக்கியங்களில் இயற்பெயரும் சுட்டுப்பெயருமான செயப்படு பொருள் தொகும்.

எ-டு : அவர் ஒரு வாரத்திற்கு முன்னமே (பணத்தை) அனுப்பி விட்டாராம் – இயற்பெயர்.

அவர் ஒரு வாரத்திற்கு முன்னமே (அதை) அனுப்பிவிட்டாராம்

- சுட்டுப்பெயர்.

(2) வினாவிற் குறித்த செயப்படுபொருள், விடையில் தொகும். எ-டு : வினா : அவர் வீடு வாங்கிவிட்டாரா?

விடை : அவர் போன மாதமே (வீடு) வாங்கிவிட்டார்.

(3) எதிர்கால வினையெச்சத்தின்பின், அவ் வினையடிப் பிறந்த வினையாலணையும் பெயரும் தொழிற்பெயருமான செயப்படு

பொருள் தொகும்.

எ-டு : சொன்னால்

மாட்டார்?

(சொன்னதைக்) கேட்க

வேண்டும்.

வலியக்கொடுத்தால் (கொடுத்ததை) யார்தான் வாங்க

வினையாலணையும் பெயர்.

போனால் (போவதைத்) தடுப்பவர் இல்லை - தொழிற்பெயர்.

(4) எதிர்கால வினையெச்சத்தின்முன் திட்டமற்ற செயப்படு பொருள் விரிப்பின், அதன்பின் சுட்டுப்பெயர் தொகும். எ-டு : (ஒன்றைச்) சொன்னால் (அதைக்) கேட்கவேண்டும்.

(5) திட்டமற்ற செயப்படுபொருள் பொதுவாய்த் தொகும்.

எ-டு : இரப்போருக்கு (ஒன்றை) இடு.

(ஒன்றை) எழுதுவதற்குத் தாளும் இறகியும் மையும் வேண்டும். (ஒன்றைக்) கொடுக்கிறவன் நல்லவன்.

(6) செயப்படுபொருள் இன்னதெனத் தெளிவாய் அறியக் கூடிய (அதாவது பயனிலையின் வினையடியாய்ப் பிறந்த பெயராகவுள்ள) இடங்களில், அது தொகும்.

எ-டு : புலவர் சிவக்கொழுந்து நன்றாய்ப் (பாட்டுப்) பாடுகிறார் மலையப்பன் இன்று ஒழுங்காய்ப் (பாடம்) படிக்கிறான்.