உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




16

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

சில வாக்கியங்களில் ஈரெழுவாய்கள் தொகும்.

எ-டு : (மழை) பெய்தும் (பயிர்) கெட்டது, (மழை) பெய்யாதும் (பயிர்) கெட்டது.

(ஒருவன்) சொன்னால், (இன்னொருவன்) கேட்கவேண்டும்.

அல்லது,

(நான்) சொன்னால் (நீ) கேட்கவேண்டும்.

சில வாக்கியங்களில் எழுவாய் பயனிலை இரண்டும் தொகும்.

எ-டு : (வாங்குவார்) இன்றைக்குக் கைக்காசு (கொடுக்க வேண்டும்), நாளைக்குக் கடன் (கேட்கவேண்டும்). (அவன்) கண்டால் ஒரு பேச்சுப் பேசுகிறான்), காணா விட்டால் ஒரு பேச்சு(ப் பேசுகிறான்).

களவு, (காரியம்) வாய்த்தால் நமக்கு (நன்மை), இல்லா விட்டால் பிள்ளையாருக்கு (நன்மை).

(அவன்) போனால் போன இடம் (இருந்துகொள்கிறான்), வந்தால் வந்த இடம் (இருந்துகொள்கிறான்). (ஒருவன்) ஆற்றிலே போகிறதை ஐயா குடி அம்மா குடி (என்று சொல்லவேண்டும்).

(அவன்) ஆறு கடக்குமட்டும் அண்ணன் தம்பி (என்றான், என்கிறது.) அதற்குப்பின் நீ யார்? நானார்? (என்கிறான், என்கிறது.)

சில வாக்கியங்களில் பல எழுவாயுடன் பயனிலை தொகும். எ-டு : (அவன்) என் வீட்டிற்கு (நீ) வந்தால் என்ன கொண்டு வருகிறாய்? உன் வீட்டிற்கு (நான்) வந்தால் என்ன கொடுக்கிறாய்? (என்கிறான், என்று கேட்கிறான்).

சில வாக்கியங்கள் வெவ்வேறெழுவாய் விரித்தற்கிடந்தரும்.

எ-டு : (சோறு) இருந்தால் சாப்பாடு (உண்டு), இல்லாவிட்டால் பட்டினி (நேரும்).

(சோறு) இருந்தால் (நாங்கள்) சாப்பாடு (சாப்பிடுவோம்), இல்லாவிட்டால் பட்டினி (இருப்போம்).

எழுவாயும் பயனிலையும்போலச் சில வாக்கியங்களில் செயப்படுபொருளும் தொகும். அது தொகைச் செயப்படு பொருள் எனப்படும்.