உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

(5) கடவுள் எங்கும் இருக்கிறார்.

கடவுள் எல்லாவிடத்திலும் இருக்கிறார்.

(6) வ் வீடு பாழாய்க் கிடக்கிறது.

(7)

இவ் வீடு ஒருவரும் குடியில்லாமல் கிடக்கிறது. காட்டுவழியாய்த் தனியே போகக்கூடாது.

காட்டுவழியாய்த் துணையில்லாமல் போகக்கூடாது.

(8) தென்னை நெய்தல்நிலத்தில் மிகுதியாக வளரும். தென்னை நெய்தல்நிலத்தில் மிகுந்த அளவாக வளரும். (9) வீரமாய்ப் பொருத படை வெற்றியடைந்தது.

வீரத்தன்மையோடு பொருத படை வெற்றியடைந்தது. (10) பச்சையாய் இருந்தால் பார்வைக்குக் குளிர்ச்சி. பச்சைநிறமாய் இருந்தால் பார்வைக்குக் குளிர்ச்சி.

(11) குருடாய் இருத்தல் மிகத் துன்பமானது.

கட்புலனில்லாமல் இருத்தல் மிகத் துன்பமானது.

(12) சும்மா இருப்பவன் சோம்பேறி.

ஒருவேலையும் செய்யாமல் இருப்பவன் சோம்பேறி.

29

மேற்கண்ட ஒவ்வொரு வாக்கிய இணையிலும், முதலாவது ஒரு தனிச்சொல் ஒரு வினைச்சொல்லை அல்லது வினையடிச் சொல்லைத் தழுவி அதன் பொருளை வேறுபடுத்துகின்றது; பின்பு ஒரு தொடர்மொழி அதே சொல்லைத் தழுவி அதே வகையில் அதன் பொருளை வேறுபடுத்துகின்றது.

எடுத்துக்காட்டாக, நன்றாய் என்னும் தனிச்சொல்லும் நல்ல முறையில் என்னும் தொடர்மொழியும், இருக்கிறது என்னும் ஒரே வினையைத் தழுவி அதன் பொருளை ஒரே வகையில் வேறு படுத்துகின்றன. நன்றாய் என்னும் வினையெச்சம் போன்றே நல்ல முறையில் என்னும் தொடர்ச்சொல்லும் வினையைத் தழுவுவதால், வினையெச்சத் தொடர்மொழி எனப்படும்.

வினையெச்சத்தின் தொழிலைச் செய்யும் தொடர்மொழி,

வினையெச்சத் தொடர்மொழி.