உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




30

பயிற்சி (1)

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

பின்வரும் வாக்கியங்களிலுள்ள வினையெச்சத் தொடர் மொழிகளை எடுத்தெழுதுக :

(1) எல்லாரும் எல்லாவகையிலும் ஏற்றத்தாழ்வில்லாமல் இருத்தல் முடியாது.

(2)

(3)

புகை வண்டிகளுள் அஞ்சல்வண்டி (Mail) மிக வேகமாய்ச் செல்லும்.

பணமில்லாமல் ஒரு காரியமும் நடவாது.

(4) எளிய நிலையில் இருப்பவர் ஏளனத்திற்கு ஆளாவர். (5) குறைந்த வேகத்தில் செல்லும் வண்டி மாட்டுவண்டி. (6) அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாம்.

(7)

பொருள்கள் சிற்றளவாக இருப்பதே பங்கீட்டுக்குக் காரணம்.

(8) இராவேளையில் வேலை செய்வது இயற்கைக்கு மாறானது. (9) கண்ணுக்கினிமையாய் இருந்தால் கவர்ச்சியாயிருக்கும். (10) பிழையில்லாமல் பேசவும் எழுதவும் பழகுதல் வேண்டும். (11) பச்சை நிறமாய் இருக்கும் பலபொருள்கள் பச்சை யெனப் பெயர்பெறும்.

(12)

நோயில்லாமல் இருப்பதற்கு, நல்லுணவு உழைப்பு துப்புரவு (சுத்தம்) மகிழ்ச்சி முதலிய பல நிலைமைகள் வேண்டும்.

பயிற்சி (2)

பின்வரும் வாக்கியங்களிலுள்ள வினையெச்சங்கட்குப்

பதிலாக, வினையெச்சத் தொடர்மொழிகளை அமைக்க.

(1) திருவாளர் பாரதிதாசனார் அழகாகச் இயற்றுகிறார்.

(2) ஒன்றைச் செய்தால் சரியாய்ச் செய்யவேண்டும்.

செய்யுள்

(3) எளிதாய் வந்த பொருளின் அருமை தெரிவதில்லை.

(4) ஆதியில் மக்கள் உணவுப் பொருள்களைப் பச்சையாகவே உண்டுவந்தனர்.

(5) வகுப்பிற்குப் பிந்திவரும் மாணவன் தன் பாடங்களைச் செவ்வையாய்ப் படிக்கமாட்டான்.

(6)

புகைவண்டி நிலையத்தில் வழிப்போக்கர் வரிசையாய் நின்று சீட்டு வாங்கவேண்டும்.