உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

(7)

நொறுங்கத் தின்றவனுக்கு நூறு வயது.

31

(8) இலவசமாய்ப் பொருள்களை வாங்குவதற்கு வறியாரைப் போன்றே செல்வரும் விரும்புகின்றனர்.

(9) முன்பு நம் தேசத்தில் இருப்புப் பாதை இல்லை.

(10) எந்தப் பொருளையும் மொத்தமாய் வாங்கினால் விலை குறையும்.

(11)

நிரடாகச் செய்யுள் இயற்றுவது திறமையன்று.

(12) முந்தித் தூங்கினால் முந்தி எழலாம்.

பயிற்சி (3)

பின்வரும் வாக்கியங்களிலுள்ள வினையெச்சத் தொடர் மொழிகட்குப் பதிலாக, வினையெச்சங்களை அமைக்க :

(1) கட்டுரை யெழுதிப் பயின்ற மாணவனின் நடை திருந்திய முறையில் இருக்கும்.

(2) கடாரம் (பர்மா) இந்தியாவிற்குக் கீழ்த்திசையில் உள்ளது. (3) ஒருவர் சொற்பொழிவு நிகழ்த்தும்போது, கேட்போர் ஒன்றும் பேசாது இருத்தல்வேண்டும்.

(4)

66

பாடிகாவலதிகாரி கலகக்காரரை நோக்கி 'இன்னே ஓடிப்போங்கள்; இல்லாவிட்டால் சுட்டுவிடுவோம்" என்றார்.

(5) அதிகாரிகட்கு அணுகிய இடத்தில் இருத்தலால் நன்மையு முண்டு; தீமையுமுண்டு.

(6) குழந்தை குறைந்த வேகத்தில் நடக்கும்.

(7) சரக்கு மிகுந்த அளவாயிருந்தால் சந்தைக்கு வரும்.

(8) சிற்றளவாகக் கட்டிப் பேரளவாக வாழவேண்டும்.

(9) மனத்தில் மாசில்லாதிருத்தலே அறத்தின் இலக்கணமாம்.

(10) முக்காலத்திலும் உள்ள உண்மையை நிகழ்கால வினையாற் கூறவேண்டும்.

(11) உரத்த குரலிற் பேசினால் நெடுந்தொலைவிற்குக் கேட்கும்.

(12) அவ்விடத்திற்குப் போனால் அவரைக் காணலாம்.