உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

33

(15) மகத்துவம் பொருந்திய அகத்திய முனிவர் இயற்றிய அகத்தியம் என்னும் முத்தமிழிலக்கணம், பன்னீராயிரஞ் சூத்திரங்களை யுடையது.

(16)

(17)

பல்லாயிரக் கணக்கான பழந்தமிழ் நூல்கள், இருந்த விடமுந் தெரியாது போனவிடமுந் தெரியாது, இறந்துபட் ாழிந்தன.

மாயவரத்தின் பழங்காலப்பெயர் மயிலாடுதுறை.

(18) அவன் இருந்தாற்போலிருந்து எழுந்து போய்விட்டான். (19) ஆடையணி யழகினும் அறிவு சிறந்தது.

மனிதவுடம்பை யெடுத்தமட்டில் ஒருவன் மனிதனாகி விடமாட்டான்.

(20)

(21)

அருந்தமிழ் நூல்களை

முதன்முதல்

அழகாக

அச்சிட்டுத் தந்தவர் ஆறுமுக நாவலர்.

(22) நுண்மாண் நுழைபுலம் மண்வாழ் மாந்தருள் ஒரு சிலர்க்கே யுண்டு.

(23) நாடக வழக்கும் உலகியல் வழக்கும் கூடிய வழக்குப் புலனெறி வழக்கு எனப்படும்.

(24) இருதலைக்கொள்ளி யெறும்புபோல் இடர்ப் படுபவனுக்கு இன்பம் ஏது?

(25) கட்டிக்கொடுத்த சோறும் கற்றுக்கொடுத்த சொல்லும் எத்தனை நாளைக்கு?

6. கிளவிய வகைகள்

தொடர்மொழிபோன்றே, கிளவியமும், (1) பெயர்க் கிளவியம் (Noun Clause), (2) பெயரெச்சக் கிளவியம் (Adjective Clause), (3) வினையெச்சக் கிளவியம் (Adverb Clause) என மூவகைப்படும்.

பெயர்க்கிளவியம் (Noun Clause)

பெயர்த்தன்மையுடைய கிளவியம் பெயர்க்கிளவியம். அது எழுவாயாகவும் செயப்படுபொருளாகவும் வரும். 'என்பது' அல்லது 'என்று' என்னும் சொல் அதைப் பயனிலையுடன் இணைக்கும்.

பெயர்க்கிளவியம் எழுவாயாயின் ‘என்பது' என்னும் இணைப்புச்சொல் முதல் வேற்றுமையிலும், அது செயப்படு பொருளாயின், அவ் இணைப்புச்சொல் இரண்டாம் வேற்றுமை