உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




34

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

யிலும் இருக்கும். அவ் இரண்டாம் வேற்றுமை யுருபு விரிந்தும் தொக்கும் நிற்கும்; ஆயினும், விரிந்து நிற்பதே பெரும்பான்மை.

எ-டு:

எழுவாய்

குயில் காகத்தின் கூட்டில் முட்டையிடும் என்பது பலர்க்குத் தெரியாது.

குயில் காகத்தின் கூட்டில் முட்டையிடும் என்று பலர்க்குத் தெரியாது.

இவற்றில், 'குயில் காகத்தின் கூட்டில் முட்டையிடும்' என்பது எழுவாய்; 'தெரியாது' என்பது பயனிலை; ‘என்பது’, ‘என்று' என்பன இணைப்புச்சொற்கள்.

செயப்படுபொருள்

அணுக்குண்டாலும்

நன்மையுண்டு

அறியவில்லை.

என்பதைப் பலர்

அணுக்குண்டாலும் நன்மையுண்டு என்று பலர் அறியவில்லை.

இவற்றில் 'பலர்' என்பது எழுவாய்; 'அறியவில்லை' என்பது பயனிலை; ‘அணுக்குண்டாலும் நன்மையுண்டு' என்பது செயப் படுபொருள்; 'என்பது', 'என்று' என்பன இணைப்புச் சொற்கள்.

என்ற செய்தி', 'என்னும் உண்மை' முதலிய தொடர்கள் அல்லது பெயரொட்டுகளும், என்பது, என்னும் சொல்லைப் போன்று பெயர்க்கிளவியங்களைப் பயனிலையுடன் இணைக்கும்.

எ-டு : இந்திய விடுதலைக்கு அடிகோலியவர் ஓர் ஆங்கிலேயர் என்ற செய்தி வியக்கத்தக்க தொன்றாம். (எழுவாய்)

மொழி மாந்தன் செயற்கை என்னும் உண்மையை இன்னும் பலர் உணரவில்லை. (செயப்படுபொருள்)

பெயரெச்சக் கிளவியம் (Adjective Clause)

பெயரெச்சம்போல் பெயரைத் தழுவி நிற்கும் கிளவியம்

பெயரெச்சக் கிளவியம்.

எ-டு : தச்சன் செய்த (பெட்டி).

வள்ளுவர் வகுத்த (வழி).