உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

35

இராவ்சாகிபு தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் ஆண்டு பலவாக அரும்பாடுபட்டாராய்ந்தெழுதிய (கருணாமிர்த சாகரம்).

(பெயரொட்டு – Noun in Apposition)

ரு

குறிப்பு: (1) எழுவாய்த் தொடர் முறையிலுள்ள சொற்றொடரான பெயரெச்சக் கிளவியங்கள், முறை மாற்றப்படின், பெயரெச்சக் கிளவியமாகாது பெயரெச்சத் தொடராம்.

எ-டு : செய்த தச்சன்

வகுத்த வள்ளுவர்

(2) பெயரெச்சக் கிளவியங்களின் எழுவாய் பிற வேற்றுமைப் பெயராக மாற்றப்படினும், அக் கிளவியத்தன்மை கெடும். அன்று அவை பெயரெச்சத் தொடர்மொழியாம்.

எ-டு : (நீ விரும்பும்) - உனக்கு விருப்பமான

(அதிகன் ஔவைக்குக் கொடுத்த) - அதிகனால் ஔவைக்குக் கொடுக்கப்பட்ட

(3) ரு சொற்றொடரான பெயரெச்சக் கிளவியங்கள் பயனிலை தொக்குப் பெயரொடு கூடின், வேற்றுமைத் தொடராம்.

எ-டு : கபிலர் பாடிய (பாட்டு) - கபிலர் பாட்டு

மழை பெய்யும் (நாள்) - மழை நாள்.

(4) 'உள்ள', 'இல்லாத', 'தெரியாத' முதலிய சொற்களில் முடியும் சில தொடர்கள், கூறுவான் குறிப்பின்படி, பெயரெச்ச மாகவும், பெயரெச்சக் கிளவியமாகவும் கொள்ளப்படலாம். ஆயினும், பெயரெச்சமாகக் கொள்வதே பொருத்தமாம்.

எ-டு : அறிவுள்ள (பிள்ளை) அழகில்லாத (மலர்)

கண்தெரியாத (கிழவன்)

'உள்ள', 'இல்லாத', 'தெரியாத' முதலிய சொற்கள் பெயரொடு சேர்ந்து பெயரெச்ச விகுதித்தன்மை யடையாது தெளிவான வினைகளைக் குறிப்பின், அவற்றில் முடியும் தொடர்கள் பெயரெச்சக் கிளவியமாம்.

எ-டு : தண்ணீர் உள்ள (இடம்)

பணப்புழக்கம் இல்லாத (காலம்)

விடை தெரியாத (வினா)