உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

வினையெச்சக் கிளவியம் (Adverb Clause)

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

வினையெச்சம்போல், வினைமுற்றையும் பெயரெச்சத்தையும் வேறோர் வினையெச்சத்தையும் தொழிற்பெயரையும் வினையா லணையும் பெயரையும் தழுவும் கிளவியம் வினையெச்சக்கிளவியம்.

எ-டு : மழை பெய்து * (பயிர் விளைகிறது)

மழை பெய்து (பயிர் விளைகின்ற காடு மானாமாரிக் காடு)

மழை பெய்து (பயிர் விளைந்தால் நாடு செழிக்கும்)

மழை பெய்து (பயிர் விளைதல் நல்லது)

மழை பெய்து (விளைவது மானாமாரிப் பயிர்)

6

இவற்றுள், 'மழை பெய்து' என்னும் வினையெச்சக் கிளவியம், 'விளைகிறது' என்னும் வினைமுற்றையும் 'விளைகின்ற' என்னும் பெயரெச்சத்தையும் விளைந்தால்' என்னும் (வேறொரு) வினையெச்சத்தையும், 'விளைதல்' என்னும் தொழிற்பெயரையும், 'விளைவது' என்னும் வினையாலணையும் பெயரையும், முறையே தழுவிநிற்றல் காண்க.

இவற்றுள், 'பெய்து' என்னும் வினையெச்சம் தன்வினை கொண்டு முடியாது பிறிதின்வினைகொண்டு முடிந்தது. அதாவது, 'பெய்து' என்னும் மழையின் வினை 'விளைகிறது' முதலிய பயிரின் வினைகொண்டு முடிந்தது.

இங்ஙனமன்றி,வினையெச்சக் கிளவியம் தன்வினை கொண்டு

முடியின், அதன் தனித்தன்மை கெடும்.

எ-டு : மாணவன் படித்து (த் தேறுகின்றான்)

மாணவன் படித்து (த் தேறுகின்ற)

மாணவன் படித்து (த் தேறினால்)

,

இவற்றுள், 'மாணவன் படித்து' என்னும் வினையெச்சக் கிளவியம், 'தேறுகின்றான்' என்னும் வினைமுற்றோடு கூடி வாக்கியமாகவும், 'தேறுகின்ற' என்னும் பெயரெச்சத்தோடு கூடிப் பெயரெச்சக் கிளவியமாகவும், "தேறினால்' என்னும் வினையெச்சத்தோடு கூடி வேறொரு வினையெச்சமாகவும் மாறித் தன் தனித்தன்மை யிழந்து நிற்றல் காண்க.

  • 'செய்து' என்னும் வாய்பாட்டு இறந்தகால வினையெச்சம் தன்வினை கொண்டன்றிப்

பிறிதின் வினைகொண்டு முடியாதென்று தொல்காப்பியம் கூறும்; ஆயினும், இக்காலத்தில் அது கவனிக்கப்பெறாது..