உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

வினையெச்சக் கிளவியப் பொருள்கள்

வரும் :

37

வினையெச்சக் கிளவியம் பின்வருமாறு பல பொருள் பற்றி

1. காலம்

எ-டு : வடமொழியாளர் தென்னாட்டிற்கு வருமுன் (வடசொற்கள் தமிழிற் கலக்கவில்லை).

2.இடம்

எ-டு : கலைமகள் இருக்குமிடத்தில் (திருமகள் இருப்பது அரிது). 3.நோக்கம்

எ-டு : மக்கள் நலமடையும்பொருட்டு (மருத்துவசாலைகள் ஆங்காங்கு நிறுவப்பட்டுள).

4. காரணம்

எ-டு : தமிழர் தமிழைப் பேணாததினால் (அளவிறந்த தமிழ்நூல்கள் அழிந்து போயின).

5.விளைவு

எ-டு : கணக்கற்ற மக்கள் கதறியழுமாறு (காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்).

6. நிலைப்பாடு (Condition)

எ-டு: ஆண்டான் கூலியைக் குறைத்தால் (அடிமை வேலையைக் குறைப்பான்).

மாணவர் குறித்த காலத்தில் பணங்கட்டினால்தான் (அவர் தேர்வெழுத முடியும்).

7. ஒப்பீடு (Comparison)

எ-டு : அருணகிரிநாதர் பாடியதைப்போல (வண்ணம் பாடுகின்றவர் முன்னுமில்லை, பின்னுமில்லை).

8. வைத்துக்கொள்வு (Supposition) அல்லது இணக்கம் (Concession)

எ-டு : உலகமெல்லாம் நிலைமாறினும் (சான்றோர் ஒழுக்கநிலை மாறார்).

கம்பர் எத்துணையோ உருக்கமாய்த் தடுத்து மொழிந்தும் (மூன்றாங் குலோத்துங்கச்சோழன் அம்பிகாபதியைக் கொன்றுவிட்டான்).