தொடரியல்
வினையெச்சக் கிளவியப் பொருள்கள்
வரும் :
37
வினையெச்சக் கிளவியம் பின்வருமாறு பல பொருள் பற்றி
1. காலம்
எ-டு : வடமொழியாளர் தென்னாட்டிற்கு வருமுன் (வடசொற்கள் தமிழிற் கலக்கவில்லை).
2.இடம்
எ-டு : கலைமகள் இருக்குமிடத்தில் (திருமகள் இருப்பது அரிது). 3.நோக்கம்
எ-டு : மக்கள் நலமடையும்பொருட்டு (மருத்துவசாலைகள் ஆங்காங்கு நிறுவப்பட்டுள).
4. காரணம்
எ-டு : தமிழர் தமிழைப் பேணாததினால் (அளவிறந்த தமிழ்நூல்கள் அழிந்து போயின).
5.விளைவு
எ-டு : கணக்கற்ற மக்கள் கதறியழுமாறு (காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்).
6. நிலைப்பாடு (Condition)
எ-டு: ஆண்டான் கூலியைக் குறைத்தால் (அடிமை வேலையைக் குறைப்பான்).
மாணவர் குறித்த காலத்தில் பணங்கட்டினால்தான் (அவர் தேர்வெழுத முடியும்).
7. ஒப்பீடு (Comparison)
எ-டு : அருணகிரிநாதர் பாடியதைப்போல (வண்ணம் பாடுகின்றவர் முன்னுமில்லை, பின்னுமில்லை).
8. வைத்துக்கொள்வு (Supposition) அல்லது இணக்கம் (Concession)
எ-டு : உலகமெல்லாம் நிலைமாறினும் (சான்றோர் ஒழுக்கநிலை மாறார்).
கம்பர் எத்துணையோ உருக்கமாய்த் தடுத்து மொழிந்தும் (மூன்றாங் குலோத்துங்கச்சோழன் அம்பிகாபதியைக் கொன்றுவிட்டான்).