உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

9. மாறு (Contrast)

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

எ-டு : மனுதரும சாத்திரம் கூறுவதற்கு மாறாக (எல்லார்க்கும் ஒப்பத் தண்டம் விதிப்பது திருக்குறள்).

10. அளவு

எ-டு : திருடன்

உண்மையை ஒப்புக்கொள்ளும் வரையும்

காவற்சேவகர் அவனைக் கடுக வதைத்தனர்.)

விலாப்புடைக்க (விருந்துண்டான்).

பயிற்சி

பின்வரும் வாக்கியங்களிலுள்ள கிளவியங்களை எடுத் தெழுதி, அவற்றுள் ஒவ்வொன்றும் இன்னின்னதென்று குறிப்பிட்டு, அதற்குக் காரணமுங் காட்டுக :

(1) உன் சொல் எல்லார்க்கும் கேட்குமாறு தெளிவாய்ப் பேசல்வேண்டும்.

(2) பசிவந்தாற் பத்தும் பறந்துபோம்.

(3)

வில்லிபுத்தூரார் பாடிய பாரதத்தை நல்லாப் பிள்ளையார் நிறைவித்தார்.

(4) அகத்தியர் இன்றும் பொதியமலையி லிருக்கிறார் என்று நம்புவாரும் உளர்.

(5) கும்பகோணத்தான் கொள்ளை கொண்டுபோகத் தஞ்சா வூரான் தண்டங் கொடுத்தானாம்.

(6)

இன்றைக்கிருந்தார் நாளைக்கிருப்பர் என்று எண்ணும் நிலைமையில்லை.

(7) யாராத்தாள் செந்தாலும் பொழுதுவிடிந்தால் தெரியும். (8) காடு வா என்கிறது, வீடு போ என்கிறது.

(9)

ஈ என இரத்தல் இழிந்தது.

(10)

பனி பெய்து கடல் நிறையுமா?

(11) பேதை பெருஞ்செல்வம் அடைந்தால் அயலார் கொழுக்கத் தமர் பசிப்பர்.

(12)

பரிமாறுகிறவன் தன்னவனானால்,

தலைப்பந்தியி

லிருந்தாலென்ன? கடைப்பந்தியி லிருந்தாலென்ன?