உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

(13) காடுகெட ஆடு விடு, ஆறுகெட நாணலிடு.

39

(14) நாட்டுக்கு நல்லதுரை வந்தாலும், தோட்டிக்குப் புல் சுமக்கிறது போகாது.

(15) மயிலே! மயிலே! இறகுபோடு என்றால் போடுமா?

(16)

உரு ஏறத் திரு ஏறும்.

(17) ஊரார் பிள்ளையை ஊட்டிவளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

(18)

விளையாட்டுப்பிள்ளைகள் செய்த வேளாண்மை வீடுவந்து

சேராது.

(19)சிறுபிள்ளை

யில்லாத வீடும் சீரகமில்லாத கறியு

செவ்வையா யிரா.

(20) ஆனையிருந்தாண்ட இடத்தில் பூனையிருந்து புலம்பி யழுகிறது.

(21) யான் பெற்றபேறு இவ் வையகம் பெறுக.

(22) கரும்பு இனிக்கிறதென்று வேரோடு பிடுங்கலாமா?

(23) வடநூலார் கூறும் நால்வருணமும் தென்னூலார் கூறும் நாற்குலமும் வேறுபட்டவை.

(24) ஊர்வாரியிலுள்ள

பிறக்கும் பிள்ளையும்.

கொல்லையும் உத்திரட்டாதியிற்

(25) நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான்.

கிளவியத்தை உள்ளிட்ட கிளவியம்

பெயர்க்

மூவகைக் கிளவியங்களும் தனித்தனி வேறு கிளவியத்தைத் தம்முள்ளிட்டும் வரும். அன்று அவை கிளவியத்தை

உள்ளிட்ட கிளவியங்களாம்.

எ-டு: (1) அறிவியலால் (விஞ்ஞானத்தினால்) என்றும் தீமையே விளையும் என்று பலர் கூறுவது அறியாமைப் பாற்பட்டதே.

(2) தேர்வு வேண்டா என்று மாணவர் சொல்லுகிற காலம் இது. (3) தொழிலாளிகளின் நிலைமை உயர்த்தப்பட வேண்டும் என்று யார் சொன்னாலும், முதலாளி கட்குக் கோபம் வரத்தான் செய்யும்.