உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

இவை மூன்றும், முறையே, கிளவியத்தை உள்ளிட்ட பெயர்க் கியவியமும் பெயரெச்சக் கிளவியமும் வினையெச்சக் கிளவியமு மாகும்.

1 ஆவதில், ‘அறிவியலால்... விளையும்' என்பது ஒரு பெயர்க் கிளவியம்; 'அறிவியலால்... கூறுவது' என்பது, அக் கிளவியத்தை உள்ளிட்ட பெயர்க் கிளவியம்.

2 ஆவதில், 'தேர்வு வேண்டா' என்பது ஒரு பெயர்க் கிளவியம்; 'தேர்வு.... சொல்லுகிற' என்பது, அக் கிளவியத்தை உள்ளிட்ட பெயரெச்சக் கிளவியம்.

3 ஆவதில், 'தொழிலாளிகளின்.... வேண்டும்' என்பது ஒரு பெயர்க் கிளவியம்; 'தொழிலாளிகளின்... சொன்னாலும்' என்பது, அக் கிளவியத்தை உள்ளிட்ட வினையெச்சக் கிளவியாம்.

இனி, கிளவியங்களை உள்ளிட்ட கிளவியமும் உண்டு.

எ-டு : 'அன்பே கடவுள்' என்று திருமூல நாயனார் கூறியது அனைவர்க்கும் உடன்பாடே என்று ஆசிரியர் மறைமலை அடிகள் சொல்வதும் ஒரு சிலர்க்கு வருத்தத்தை விளைப்பின், வேறு எதைத்தான் இந் நாட்டார்க்கு எடுத்துச் சொல்வது?

ரு

இதில், 'அன்பே கடவுள்' என்பது ஒரு பெயர்க்கிளவியம்; 'அன்பே.... கூறியது' என்பது, அக் கிளவியத்தை உள்ளிட்ட பெயர்க்கிளவியம்; 'அன்பே.... உடன்பாடே' என்பது அவ்வி கிளவியங்களையும் உள்ளிட்ட பெயர்க்கிளவியம்; 'அன்பே.... சொல்வதும்' என்பது, அம் முக்கிளவியங்களையும் உள்ளிட்ட பெயர்க்கிளவியம். இங்ஙனம் இது மும்முடிக் கிளவியத்தை உள்ளிட்ட கிளவியமாகும்.

பயிற்சி

கீழ்வரும் வாக்கியங்களிலுள்ள

உட்கிளவியங்களையும்

உள்ளிட்ட கிளவியங்களையும் எடுத்தெழுதுக :

(1)

ஐரோப்பியன் திறமை இந்தியனுக்கு வராதென்று நீ சொன்னது மெய்தானா?

(2) வடமொழி தேவமொழி யென்று நீ குருட்டுத்தனமாய் நம்பினால், அதற்கு நானென்ன செய்கிறது?

(3) தீமை செய்தவனுக்கும் நன்மை செய் என்று இயேசு சொன்னதைப்போல, திருவள்ளுவரும் சொல்லியிருக் கிறார்.