உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




44

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கற்றார்; அவற்றில் 'கலைத்தலைவன்' (M.A.) பட்டம் பெற்றார்; பின்பு சட்டக்கல்லூரியிற் பயின்று 'சட்டத் தலைவன்' (M.L.) பட்டமும் பெற்றார்; அதன்பின் சட்டக்கல்லூரியில் ஈராண்டு விரிவுரையாளரா யிருந்தார்; பின்னர் நூலாசிரியராகவும் உரையாசிரியராகவும் சிலகாலம் தொண்டு செய்தார்; இறுதியில் அண்ணா மலைப் பல்கலைக்கழகத்திற் பேராசிரியராக அமர்ந்தார்; அங்கு நோய்வாய்ப்பட்டு நெல்லை சென்றார்; சில மாதங்கட்குப்பின் 50ஆம் அகவையில் தம் இல்லத்தில் இறையடி யெய்தினார்.

இவ்விரு வாக்கியங்களும் ஒரே எழுவாயும் பல முற்றுப் பயனிலைகளுங் கொண்டவை. இவை ஒரே எழுவாய் கொண்டன வாயினும், முதற்பயனிலைக்குப் பிற்பட்ட பயனிலைதொறும் எழுவாய்க்கேற்ற பதிற்பெயரை வருவித்து அதை எழுவாயாகக் கருதல் வேண்டும். அல்லாக்கால் கூட்டுவாக்கியம் என்னும் பெயர் பொருந்தாது.

கூட்டு வாக்கியங்களில், ஓர் எழுவாயும் அதன் முற்றுப் பயனிலையும் சேர்ந்த பகுதி ஒரு கிளவியம் ஆகும். மேற்கண்ட வாக்கியங்களுள், முன்னது இரு கிளவியங்களையும், பின்னது எண் (எட்டுக்) கிளவியங்களையும் கொண்டது.

முன்னதில் உள்ளவை :

(1) மாணவரே! நீங்கள் உங்கள் பாடத்தை நன்றாய்ப் படிக்க வேண்டும்.

(2) (மாணவரே!) நீங்கள் தேர்வில் சிறப்பாகத் தேற வேண்டும். பின்னதில்

கண்டுகொள்க.

உள்ளவற்றைப் பின்வருமாறு

விரித்துக்

(1) திருவாளர் கா. சுப்பிரமணியப்பிள்ளை இளமையிலேயே ஆங்கிலம், தமிழ், சமற்கிருதம் மூன்றையுங் கற்றார்.

(2) அவர் அவற்றில் 'கலைத்தலைவன்' (M.A.) பட்டம்

பெற்றார்.

அங்ஙனமே எஞ்சியவும்.

கூட்டு வாக்கியங்களில்

உள்ள கிளவியங்களெல்லாம்

ஒன்றையொன்று சாராத சமநிலைக் கிளவியங்கள் (Co-ordinate Clauses).

ஒரு கூட்டு வாக்கியத்தில் இரு

கிளவியங்களாயினும் பல

கிளவியங்களாயினும் இருக்கலாம். ரு கிளவியங்கள் உள்ளதைப்