உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

45

புணர் வாக்கியம் (Double) என்றும், பல கிளவியங்கள் உள்ளதைத் துணர்வாக்கியம் (Multiple) என்றும் அழைக்கலாம்.

கூட்டு வாக்கியங்களின் பொருள் தொடர்பு, பின்வருமாறு

பலவகையில் அமையலாம் :

1. காரண காரியம்

எ-டு : மழை பெய்கிறது; பயிர்விளைகிறது.

2. முன்பின்மை

தோட்டிபோல உழைக்கவேண்டும்; துரைபோலச் சாப்பிட வேண்டும்.

மடியிற் கனமில்லை; வழியிற் பயமில்லை.

எ-டு: மணியடித்தது; கைகாட்டி சாய்ந்தது; வண்டி வந்துவிட்டது. 3.உடனிகழ்ச்சி

எ-டு : இங்கொருவர் வினவுகின்றனர்; அங்கொருவர் வினவு கின்றனர்.

நம்பி வருகின்றான்; நாயும் உடன்வருகின்றது.

சிலர் மாட்டுவண்டியிற் செல்கின்றனர்; சிலர் குதிரை வண்டியிற் செல்கின்றனர். சிலர் இயங்கி (motor)யிற் செல்கின்றனர்; சிலர் இழுவண்டி (rikshaw)யிற் செல் கின்றனர்; சிலர் நடந்து செல்கின்றனர்; வழிநெடுகப் பெருங் கூட்டம்.

ஒட்டக்கூத்தர் இரண்டாம் குலோத்துங்கச் சோழனுக்கு ஆசிரியராகவும் இருந்தார்; அமைச்சராகவும் இருந்தார்.

4. மறுநிலை(Alternative)

எ-டு: அங்கதன் செல்லவேண்டும்; இல்லாவிட்டால் அனுமன் செல்லவேண்டும்.

5.முரணிலை

மாவைத் தின்றால் பணியாரமில்லை; பணியாரத்தைத் தின்றால் மாவில்லை.

சிலநேரம் படிப்பேன்; சிலநேரம் எழுதுவேன்.

எ-டு : ஊரெங்கும் பேர்; வீடு பட்டினி.

அவர் எத்துணையோ சொல்வார்; ஆனால், ஒன்றுகூடச் செய்யமாட்டார்.