உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




46

6. பலநிலை

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

கூட்டம் நிகழும்; ஆனால் மழைவந்துவிட்டது.

பொழுதடைந்து இருட்டிவிட்டது; வழி தெரியவில்லை; போகவேண்டிய இடமோ மிகத் தொலைவு!

எ-டு : உலகம் இப்படியும் சொல்லும்; அப்படியும் சொல்லும். காடாண்டவரும் பாண்டவர்; நாடாண்டவரும் பாண்டவர். ஒன்றா சொல்கிறான்? ஒருவழியா போகிறான்?

பொதுவாக, மணமகனின் அழகை விரும்புவன் மணமகள்; அவனது கல்வியை விரும்புவன் அவளின் தந்தை; அவனது செல்வத்தை விரும்புவள் அவளின் தாய்; அவனது குலப்பிறப்பை விரும்புவர் அவளின் உறவினர்.

7. ஒப்பீடு (Comparison) அல்லது வேற்றுமை (Contrast)

எ-டு : இரப்பது எல்லாவற்றிலும் இழிவு; அதிலும் இழிவு இரப்போனுக்கு இல்லையென்றல்.

ஒன்றைச் சொல்லாது கொடுப்பவர் பூவாது காய்க்கும் மரம் போல்வர்; சொல்லிக் கொடுப்பவர் பூத்துக் காய்க்கும் மரம் போல்வர்; சொல்லியுங் கொடாதவர் பூத்துங் காயாத மரம் போல்வர்.

தீமைக்கும் நன்மை செய்வது தேவ இயல்பு; நன்மைக்கு நன்மையும் தீமைக்குத் தீமையும் செய்வது மக்கள் இயல்பு; நன்மைக்குந் தீமை செய்வது பேய் இயல்பு.

8. ஒப்புமைக் கூட்டம்

எ-டு : குட்டக் குட்டக் குனிகிறவனும் முட்டாள்; குனியக் குனியக் குட்டுகிறவனும் முட்டாள்.

போன மாட்டைத் தேடுவாருமில்லை; வந்த மாட்டைக் கட்டுவாருமில்லை.

பிள்ளையைப் பெற்றெடுப்பவன் ஒரு தந்தை; அதைப் பேணி வளர்ப்பவன் ஒரு தந்தை; அதற்குக் கல்வி புகட்டுபவன் ஒரு தந்தை; அதற்குச் செல்வங் கொடுப்பவன் ஒரு தந்தை; அதை மனையறம் படுத்துபவன் ஒரு தந்தை; அதை மாண்தொழிற் படுத்துபவன் ஒரு தந்தை.