உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தொடரியல்

47

கூட்டு வாக்கியங்களிலுள்ள பல கிளவிய எழுவாய்களும் ஒரே சொல்லைத் தனித்தனி பயனிலையாகக்கொண்டு முடியின், அவற்றை ஒரே பயனிலைகொண்டு முடியுமாறு புணர்த்தெழுதுவது வழக்கம்.

எ-டு: அறிஞர் கல்வியைச் சிறப்பாக விரும்புவர்; அறிவிலிகள் செல்வத்தைச் சிறப்பாக விரும்புவர்.

இவ் வாக்கியம் சுருக்கம்பற்றி,

அறிஞர் கல்வியையும் அறிவிலிகள் செல்வத்தையும் சிறப்பாக விரும்புவர்,

என்றெழுதப் பெறும்.

ஒரே சொல்லைப் பயனிலையாகக்கொண்டு முடியும் பல எழுவாய்கள் ஒரே செயப்படுபொருள் கொண்டிருப்பின், கூட்டு வாக்கியமாய் எழுதப்பெறாது தனி வாக்கியமாய் எழுதப்பெறுவதே பெரும்பான்மை.

எ-டு : அறிஞரும் அறிவிலிகளும் இன்னிசையை விரும்புவர்.

இங்ஙனமன்றி, அறிஞரும் இன்னிசையை விரும்புவர்; அறிவிலிகளும் இன்னிசையை விரும்புவர்,

என்றெழுதுவது ஒரு கருத்தை வற்புறுத்துமாயின் பொருத்தமுடைய தாம். இவ் வடிவில் அது கூட்டுவாக்கியமாகும்.

ஓர் எழுவாயின் பல வினைகள் தொடர்ந்துவரின், அவை யெல்லாம் ஆங்கிலக் கூட்டுவாக்கியத்தில் முற்றுவினையாகவே யிருக்கும்; ஆனால், தமிழிலோ, அவற்றுள் இறுதி வினை தவிர ஏனையவெல்லாம் எச்சவினையாகவும் இருக்கலாம். ஆதலால், ஆங்கிலத்தில் கூட்டு வாக்கிய மாயிருப்பது தமிழிலும் கூட்டு வாக்கியமா யிருத்தல்வேண்டும் என்னும் யாப்புரவு (நியதி) இல்லை. எ-டு : Nambi went to school and learnt his lessons.

நம்பி பள்ளிக்கூடம் சென்று தன் பாடங்களைப் படித்தான்.

இங்ஙனம், ஆங்கிலத்திற் கூட்டு வாக்கியமாயிருப்பது, தமிழில் தனிவாக்கியமாய் அமைதல் காண்க.

கலப்பு வாக்கியம் (Complex Sentence)

ஒரு தலைமைக் கிளவியமும் (Principal or Main Clause) ஓர் அல்லது பல சார்பு கிளவியமும் (Subordinate or Dependent Clause or Clauses) கொண்ட வாக்கியம், கலப்பு வாக்கியம் ஆகும்.