உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




48

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

தலைமைக் கிளவியம் தன்னில் தானே கருத்து முடிந்ததா யிருக்கும்; சார்பு கிளவியம் தன்னளவில் கருத்து முடியாமல் தலைமைக் கிளவியத்தைச் சார்ந்தே கருத்து முடிவதாயிருக்கும்.

சார்பு கிளவியம், மூவகைக் கிளவியங்களுள், எதாகவும் இருக்கலாம்.

(1) கால்டுவெல் கண்காணியர், தமிழ் ஒரு தனிமொழி என விளக்கியுள்ளார்.

(2) கூற்றுவன் வரும் வேளை யாருக்கும் தெரியாது.

(3) ஆயிரம்பேர் வந்தாலும், யான் அணுவளவும் அஞ்சேன்.

(4) ஏசுபெருமான், தாம் சிலுவையி லறையுண்டிருந்த போது, தம் வலப்புறத்திலிருந்த கள்ளனை நோக்கி, 'இன்றைக்கு நீ என்னோடுகூடப் பரதீசிலிருப்பாய்,'என்று திருவாய் மலர்ந்தருளினார்.

(5) நக்கீரர் சிவபெருமானை நோக்கி, 'நீர் நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே', என்று உரத்துக் கூறினார்.

இவற்றுள்

முதல் வாக்கியத்தில், 'கால்டுவெல் கண்காணியார் விளக்கி யுள்ளார்' என்பது தலைமைக் கிளவியம்; 'தமிழ் ஒரு தனிமொழி' என்பது சார்பு கிளவியம்.

2ஆம் வாக்கியத்தில், 'வேளை யாருக்கும் தெரியாது' என்பது தலைமைக் கிளவியம்; 'கூற்றுவன் வரும்' என்பது சார்பு கிளவியம்.

3ஆம் வாக்கியத்தில், 'யான் அணுவளவும் அஞ்சேன்' என்பது தலைமைக் கிளவியம்; 'ஆயிரம்பேர் வந்தாலும்' என்பது சார்பு கிளவியம்.

6

4ஆம் வாக்கியத்தில், ஏசுபெருமான் திருவாய்மலர்ந் தருளினார்' என்பது தலைமைக் கிளவியம்; 'தாம் சிலுவை யிலறை யுண்டிருந்தபோது', 'இன்றைக்கு நீ என்னோடுகூடப் பரதீசிலிருப்பாய்' என்பன சார்பு கிளவியங்கள்.

நீ

5ஆம் வாக்கியத்தில், ‘நக்கீரர் கூறினார்' என்பது தலைமைக் கிளவியம்; 'நீர் நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே’ என்பது சார்பு கிளவியம்.

1ஆம் 2ஆம் 3ஆம் 5ஆம் வாக்கியங்களில் ஒவ்வொரு சார்பு கிளவியமும், 4ஆம் வாக்கியத்தில் இருசார்பு கிளவியமும் வந்தன.