உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




49

ம்

தொடரியல் 1ஆம் 5ஆம் வாக்கியங்களில் பெயர்க்கிளவியமும், 2ஆம் வாக்கியத்தில் பெயரெச்சக் கிளவியமும், 3ஆம் வாக்கியத்தில் வினையெச்சக் கிளவியமும், சார்பு கிளவியமாக வந்தன. 4ஆம் வாக்கியத்தில் வந்துள்ள இரு சார்பு கிளவியங்களுள்; முன்னது வினையெச்சக் கிளவியம்; பின்னது பெயர்க்கிளவியம்.

5ஆம் வாக்கியத்தில், சார்பு கிளவியத்துள் ஒரு சார்பு கிளவியம் வந்துள்ளது. 'நீர்... குற்றமே' என்பது உள்ளிட்ட சார்பு கிளவியம்; 'நீர் நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்' என்பது உட்சார்பு கிளவியம்.

மேற்கண்ட வாக்கியங்களில், பெயர்க்கிளவியம் செயப்படு

பொருளாக வந்துள்ளது.

அதனால், அது வரும் வாக்கியம் பல கிளவியங்களாகப் பகுக்கப்படக்கூடியதாக வுள்ளது. அது எழுவாயாக வரும் வாக்கியம் கிளவியத்தை உள்ளிட்ட கிளவிய மாயிருக்குமே யன்றிப் பல கிளவியங்களாகப் பகுக்கப்படக் கூடியதாகாது.

எ-டு : 'நன்றி மறப்பது நன்றன்று' என்பது வள்ளுவர் கூற்று.

இதில், தலைமை சார்பு எனப் பிரிக்க முடியாமல் எல்லாம் ஒரே வாக்கியமாக இருப்பதையும், 'நன்றி மறப்பது நன்றன்று' என்பது உட்கிளவியமாக இருப்பதையும் காண்க. எழுவாயே ஒரு கிளவியமாக இருப்பதினாலும் எழுவாயில்லாமல் பயனிலையால் மட்டும் ஒரு கிளவியம் அமையாமையாலும், இந் நிலைமை ஏற்பட்டுள்ளதென அறிக.

66

,

நன்றி மறப்பது நன்றன்று' வள்ளுவர் கூற்று” என்னும் அமைப்பிற்கும் இலக்கணம் இடந்தருதலானும்; 'என்பது வள்ளுவர் கூற்று' என்னும் பகுதியில் கருத்து முடிந்திராமையானும்; 'நன்றிமறப்பது நன்றன்று என்பது தலைமைக் கிளவிய மாகாமையானும்; இவ் வாக்கியம் முழுவதையும் ஒரே கிளவியமாகக் கொள்வதே சாலப் பொருத்தமாம். ஆங்கிலத்திலும் இவ் வியல்பே உள்ளது.

'நன்றி மறப்பது நன்றன்று என்ற கூற்று வள்ளுவர் கூற்று' என்று விரித்து, 'கூற்று வள்ளுவர் கூற்று' என்பது தலைமைக் கிளவியம் எனக் கூறுவதும் பொருந்தாது.

கதம்ப வாக்கியம் (Mixed Sentence)

கூட்டு வாக்கியமும் கலப்பு வாக்கியமும் கலந்து வருவது

கதம்ப வாக்கியம்.