உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 23.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




50

உயர்தரக் கட்டுரை இலக்கணம்

எ-டு : ஆங்கிலேயர் பாஞ்சாலங்குறிச்சி வேளாகிய கட்டபொம்முவிடம் கப்பங் கேட்டபோது, அவர் “வானம் பெய்கிறது; ஞாலம் (பூமி) விளைகிறது. நாங்கள் ஏன் உங்கட்குக் கப்பங் கட்டவேண்டும்?” என்று செப்பினாராம்.

தில், 'ஆங்கிலேய... கேட்டபோது' என்னும் வினை யெச்சச் சார்புகிளவியமும், 'அவர் செப்பினாராம்' என்னும் தலைமைக்கிளவியமும், சேர்ந்து ஒரு கலப்பு வாக்கியமாகும்.

இனி, 'அவ... செப்பினாராம்' என்னும் பகுதி, மீண்டும் ஒரு கலப்பு வாக்கியமாகும். இது கலப்பு வாக்கியத்துள் வந்த கலப்பு வாக்கியம். இதில், 'அவர் செப்பினாராம்' என்பது தலைமைக் கிளவியம்; 'வானம்....கட்டவேண்டும்' என்பது பெயர்ச் சார்பு கிளவியம்.

6

ப் பெயர்ச் சார்புகிளவியம், தன்னளவில் ஒரு கூட்டு வாக்கியமாகும். இதிலுள்ள சமநிலைக் கிளவியங்கள் வானம் பெய்கிறது’, ‘ஞாலம் விளைகிறது', ‘நாங்கள் ஏன் உங்கட்குக் கப்பங் கட்டவேண்டும்?' என்னும் மூன்றுமாகும்.

ங்ஙனம் இருவகை வாக்கியங்களும், ஒரே கதம்ப வாக்கியமாகக் கலந்துள்ளமை காண்க.

குறிப்பு : நெசுபீல்டு (Nesfield) உள்ளிட்ட சில ஆங்கில இலக்கணியர் கதம்பவாக்கியம் (Mixed Sentence) என ஒன்று வகுப்பர்; ரென் (Wren), மார்ட்டின் (Martin) முதலிய ஆசிரியர் கதம்ப வாக்கி யத்தைக் கூட்டுவாக்கியத்துள்ளும் கலப்புவாக்கியத்துள்ளும் அடக்குவர். இவருள் முன்சாரார் கருத்துப்படி கதம்பவாக்கியம் இந் நூலில் தனிவகையாகக் கூறப்பட்டது.

பயிற்சி

பின்வரும் வாக்கியங்களுள், ஒவ்வொன்றையும் இன்ன வகை யென்று குறிப்பிட்டு, அதற்குக் காரணமுங் காட்டுக :

(1) ஆசிரியர் கல்லூரி வந்து சேர்ந்ததும், மணியடித்தது.

(2)

(3)

மனம் இருந்தால் மலையுஞ் சாயும்.

அகதிசொல் அம்பலம் ஏறாது.

ப்ப

(4) அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா! எனக்கொரு துப்பட்டி என்கிறான் பிள்ளை; அதற்குச் சீ! கைகால் பட்டுக் கிழியப்போகிறது, மடித்துப் பெட்டியிலே வை, என்கிறான் அப்பன்.